பக்கம்:நனவோட்டங்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ரா. சீனிவாசன் கணவனை அவள் முற்றிலும் இதயத்தை விட்டு அகற்றிய பிறகுதான் அவள் எனக்கு அந்த இடத்தைத் தந்தாள். ஒரு வீட்டில் இரண்டு பேர் குடித்தனம் நடத்தவில்லை. வீட்டுக்கு உரியவன் இடத்தைக் காலி செய்த பிறகு தான் நான் அங்குக் குடி புகுந்தேன். சட்டம் அதற்கு இடம் தராமல் இல்லை. அவனை அகற்றுவதற்கு அவள் நடத்திய போராட்டங்கள் அவை வெளியே தெரியாமல் இருந்தன. அவள் அந்தப் படங்களை அகற்றிய பிறகுதான் அவள் அதில் முழு வெற்றி பெற்றாள் என்று நினைக்கிறேன். "காதல் செய்வதற்கே வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்தால் நிச்சயமாக நான் அவனுக்கு வாழ்க்கைப்பட்டு இருக்க மாட்டேன். உறவுக்காரன் என்ற ஒரே அடிப்படைதான் எங்களை ஒன்றுபடுத்தியது. அவன் தப்புக்கண்ககுப் போட்டுவிட்டான். இன்ஸ்பெக்டராக இருந்தால் நிறைய காசு சம்பாதிப்பார் என்று எதிர் பார்த்தான். வருமான வரிக்குக் காட்ட முடியாத கணக்கு அவரிடம் குவியும் என்று நினைத்து ஏமாந்தான். நிறைய சொத்துக் கிடைக்கும் என்று நம்பினான். லஞ்சம் வாங்கு வார்கள், நிறைய சம்பாதிப்பதை விட அவர்கள் உறவினர்கள் தான் நிறைய சேர்த்து வைக்கிறார்கள். தம் பேரில் கணக்கு வைக்க முடியாது என்பதால் தம் சொந்தக் காரர்களின் மீது நிறைய சொத்து வாங்குவதைப் பார்த்திருக்கிறான். அந்த நிலையில் அவர் இவன் மீது நிறைய எழுதி வைப்பார் என்று எதிர்பார்த்தான். அது கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் என் மேல் வெறுப்புக் காட்டினான். என் அப்பா நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தால் என் குடும்பமே சந்தோஷமாக இருந்திருக்கும். அவர் லட்சிய வாழ்வில் வாழ்ந்து தொலைந்து விட்டார். அவர் சொல்கிறார் மனிதன் அறிவாளியாக ஆகிவிடலாம். வல்லவனாக இருக்கலாம். ஆனால் நல்லவனாக இருப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/158&oldid=772874" இலிருந்து மீள்விக்கப்பட்டது