பக்கம்:நனவோட்டங்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 157 தான் கஷ்டம் என்கிறார். நாங்கள் குற்றவாளிகளைத் திருத்தும் தூய பணியில் ஈடுபடுகிறோம். நாங்கள் பணம் வாங்குவது நல்லதா? வைத்தியனே நோயாளி ஆகிவிட்டால் இந்த நாட்டின் கதி என்ன ஆவது என்று கேட்டார்." இதையெல்லாம் அவள் எடுத்துச் சொல்லி இருக்கிறாள். அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன சொற்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வல்லவனாக இருப்பது எளிது; நல்லவனாக இருப்பதுதான் கடினம் என்று சொன்னார். வல்லவர்கள் கையில் நாடு சிக்கித் தவித்தது. இனியும் வல்லவர்கள் கையில் நாட்டை ஒப்புவித்தால் அவர்கள் நல்லதை வாழவிட மாட்டார்கள் என்ற உணர்வு எழுந்துள்ளது. மக்கள் நல்லவர்களிடத்தில் தான் நம்பிக்கை வைக்கிறார்கள்; வல்லவர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். அரசியல் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு தொலை ஒளியில் பேசக் கேட்டேன். அது கூட உஷாவின் வீட்டில் தான் என்று நினைக்கிறேன். அது தேர்தல் பேச்சு என்று நினைக்கிறேன். "நான் என்னை வல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் நல்லவன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்." இந்தப் புதிய தத்துவம் எனக்குப் பிடித்து இருந்தது. "நல்லவனாக மட்டும் வாழ்ந்தால் போதாது. வல்லவனாகவும் வாழவேண்டும்” என்று அண்மைக் காலத்தில் தமிழ் எழுத்தாளர்கள் வற்புறுத்திக் கொண்டு இருந்தார்கள். பாரதிதாசன் என்று நினைக்கிறேன். அவர்தான் பிசிராந்தையார்' என்ற நாடகத்தில் இக்கருத்தை வலியுறுத்துகிறார். அதை ஒட்டி மு.வ.வும் தன் எழுத்தில் இதை வற்புறுத்தி இருந்தார்; எல்லோரும் வல்லவராகத் தொடங்கி விட்டார்கள். நாட்டைச் சூறையாடுகிறார்கள். இந்த நாட்டு வரலாறே வல்லவர்கள் கையில் சிக்கிக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/159&oldid=772875" இலிருந்து மீள்விக்கப்பட்டது