பக்கம்:நனவோட்டங்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ரா. சீனிவாசன் தேடி வருவதில்லை. அவர்கள் எழுத்து மட்டும் வரும். பத்திரிகை வடிவில்; நூல்வடிவில் எப்பொழுதும் ஏதாவது தமிழ் நாவல் வாங்கிவந்து வைப்பேன். நாவல் ஒசியில் படிப்பது எனக்குப் பிடிப்பதில்லை. அதே சமயத்தில் அது பலருக்கு ஒசியில் கொடுப்பதற்கு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வேன். நான் படித்தால் மட்டும் போதாது. மற்றவர்களும் படிக்கவேண்டும் என்ற ஆசை என்னைப் பிடித்துத் தள்ளும். அது நல்ல நாவலாக இருந்தால் "இது படித்துப் பாரு' என்று வலிய அவர்களுக்குக் கொடுப்பேன் அந்த நாவல்கள் திரும்பி வராது. அதுவும் நல்லதுதானே. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சியாளர்கள் ஒருசிலருடைய வீட்டில் உள்ள புத்தகங்களைப் போல என் வீட்டிலும் குப்பை சேர்ந்துவிடும். நாவலில் இது ஒரு பெரிய நன்மை, அநாவசியமாக நம்மிடம் தங்கி இடத்தை அடைக்காது. அம்மா மட்டும் திட்டிக் கொண்டே இருப்பாள். இந்த நாவல் கதைகளை ஏன் வாங்குகிறாய்? என்று கேட்பாள். "இனிமேல் இராமாயணத்தை வாங்குகிறேன்" என்பேன். "பெரிய பெரிய நீதிபதிகளெல்லாம் விரும்பிப் படிக்கிறார்கள். நீ என்னடா சுண்டைக்காய்" என்பாள். 'நான் ஒரு சுண்டைக்காய்தான். அப்பொழுது நினைப்பதுண்டு. நாமென்ன இந்த உலகத்திலே சாதித்து விடப் போகிறோம். இப்படிச் சலிப்பு வருவதுண்டு. ஏதாவது நாவல் படிப்பேன். எதற்கு? மன ஆறுதலுக்கல்ல. அதுக்கு அம்மா சொல்கிற இராமாயணமே போதும். புதிய சிந்தனைகளைப் பெற நாவல் கட்டாயம் படிக்கவேண்டு மென்பது என் முடிவு. எனக்குப் பிரச்சார நாவல்கள் பிடிப்பதே இல்லை. அதே போல வெறும் கற்பனை அளப்புகளும் என்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/16&oldid=772876" இலிருந்து மீள்விக்கப்பட்டது