பக்கம்:நனவோட்டங்கள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ரா. சீனிவாசன் அவர் நல்லவராக வாழ்ந்ததால்தான் பணம் சேர்க்க முடியவில்லை. உஷாவின் வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளைத் தர முடிந்தது. ஆனால் பிறர் மெச்சும்படி வாரி வழங்க முடியவில்லை. உறவுக்காரனுக்கு அவளைக் கட்டி வைத்தார்; அவன் அவளைத் துறவுக்காரியாக்கி விட்டான். அவள் சொன்னாள் "அதுக்கப்புறம் நான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன், நல்ல காலம் நான் பியூசி. வரை படித்திருந்தேன். அது வரையிலும் ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால் போதும் என்றுதான் பொதுவாகப் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதாவது அவர்கள் கடமை அதோடு முடிகிறது என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பதுபோல எங்கே நடக்கிறது; தொடர்ந்து பி.காம். படித்தேன். பெண்கள் ஆடல் பாடல் இவற்றில் சிறந்து முன்னுக்கு வந்தது பழைய காலம். திரைப்படம் வந்த பிறகு ஒரு சிலர் தான் பாட முடியும், ஆடமுடியும் மற்றவர்கள் அங்கே நாடவே முடியாது. இப்பொழுது பெண்கள் அறிவாளிகள் ஆகிக் கொண்டு வருகிறார்கள். முன்னால் எங்களுக்கே உரிய அழகை வைத்து முன்னுக்கு வரமுடிந்தது. இப்பொழுது அறிவை வைத்து முன்னுக்கு வருகிறோம். அவன் என்னை நிராகரித்ததால்தான் படிக்க வாய்ப்பே ஏற்பட்டது. நிச்சயமாக அவனுக்குத்தான் நான் என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன். படிக்கும்பொழுதுதான் சுதந்திரம்' எவ்வளவு முக்கிய மானது என்பதை உணரத் தொடங்கினேன். நான் வாழ்ந்த மணவாழ்க்கை நரகம் என்பதைத் தெரிந்து கொண்டேன். நான் படிக்கும்பொழுது பலருக்கு நான் மணமானவள் என்பது தெரியாது. கழுத்தில் செயின் போட்டிருந்தேன். அப்பொழுதுதான். இந்தச் செயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/160&oldid=772877" இலிருந்து மீள்விக்கப்பட்டது