பக்கம்:நனவோட்டங்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t60 ( ரா. சீனிவாசன் 'இந்த இன்பம் என்றும் நிலைத்திருக்க' என்று வாழ்த்தினார்கள். 'ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர்விட்டு வாழும்படி வாழ்த்தினார்கள்; பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டுமென்று வாழ்த்தினார் கள். அந்தப் பதினாறு என்ன என்பது எனக்குத் தெரியாது. நிச்சயமாக 16 குழந்தைகள் அல்ல. ஒரு குழந்தை பெறுவதற்கு முன்னால் வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு விட்டது. அது எப்படி 16ம் பெறும்வரை வாழ்க்கை தொடர்கிறது. சங்கிலித் தொடர்போல் இந்தக் குழந்தைகள் இருவரையும் இணைக்கின்றன என்று நினைக்கிறேன். அந்த வாழ்த்துக்களுக்கு மதிப்புத் தருகிறேன். அதனால்தான் அந்தத் தாலியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு கெளரவம் அளித்தேன். மறுபடியும் ஒரு நிகழ்ச்சி கவனத்துக்கு வருகிறது. தாலி அணிந்ததும் மகளிர் கைந்நிறைய வளையல்கள்; கழுத்து நிறையச் சங்கிலிகள்; காது நிறையத் தோடுகள்; விரல்கள் நிறைய மோதிரங்கள்; இப்படிப் பல அணிகள் அணிகின்றனர். இந்த அணிகள் அந்தத் தாலிக்கு நன்றி செலுத்த வேண்டும். அந்தத் தாலி இல்லையென்றால் அந்த அணிகளுக்கு அவ்வளவு கெளரவம் கிடைக்காது. அநுமன் சீதையிடம் சொன்னானாம், இராவணன் அவளை எடுத்துச்சென்றபோது அவள் அணிந்திருந்த நகைநட்டுகளை எல்லாம் வழியில் போட்டுக்கொண்டே போனாளாம். அந்த நகைகள் அவர்கள் கையில் கிடைத்தனவாம். அந்த நகைகள்தாம் சீதை உயிரோடு இருக்கிறாள் என்ற செய்தியை இராமன் அறிவதற்குத் துணை செய்தனவாம். ஏனைய நகைகள் எல்லாம் மங்கல அணியைக் காத்தன என்கிறார் கம்பர். இந்தக் கதையைக் கதாகாலட்சேபத்தில் கேட்டிருக் கிறேன். அதை நினைத்துப்பார்க்கிறேன். இராமன் உயிரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/162&oldid=772879" இலிருந்து மீள்விக்கப்பட்டது