பக்கம்:நனவோட்டங்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 161 காப்பாற்றியதே அந்தத் தாலிதானாம். சீதை உயிரோடிருக் கிறாள் என்ற நினைவு அவனை வாழவைத்ததாம். அந்தத் தாலி அவனுக்கு என்னைப்பற்றிய நினைவுகளை உண்டாக்கும்; மனம் திருந்துவான் என்ற நம்பிக்கையை அது ஊட்டி வந்தது. அதைப்பார்க்கும் போதுதான் அம்மாவுக்கு மன நிறைவு. தன் மகள் வாழ்கிறாள் என்று நினைப்பாள். கம்பன் தன் இராமகாதையில் அந்தத் தாலிக்கு மதிப்புத் தருகிறான். ஆடவர் அதற்குத் தனிமதிப்புத் தருகின்றார்கள். பிற ஆடவரும் மணமானவள் என்றால் தனி மதிப்பைக் காட்டுகிறார்கள். வழியில் உந்து நிலையங்களில் செல்லும்பொழுது அதை வெளியே தெரியும்படி மாட்டிக்கொள்வேன்; வட்டமிடும் இளைஞர்களும் என்னைப்பற்றி எந்தத் திட்டமும் இடமாட்டார்கள். 'அம்மா என்ற மரியாதைக் குரிய சொற்களை அது தந்து கொண்டிருந்தது. ஆனால் 'அம்மாவாக ஆகமுடியாது என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும். நான். படித்தது பெண்கள் கல்லூரியாகப் போய் விட்டது. நல்லகாலம் எந்த அனுபவமும் இல்லாமல் வெளியேறினேன். ஆண்கள் கல்லூரியில் படித்தால் மட்டும் என்ன ? அங்கே படித்த என் சிநேகிதிகள் சொல்லி இருக்கிறார்கள். சும்மா அனாவசியமாகப் பயப்படு கிறார்கள். பண்பட்ட ஆடவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களோடு பழகுவதே ஒரு நல்ல அனுபவம். சகோதர பாசம் என்பதை அங்குதான் பார்க்க முடியும். சும்மா கதை எழுதுகிறவர்கள் ஏதாவது தவறாக எழுதுகிறார்கள். அப்படித்தான் என்ன காதல் ஏற்படுவது இயற்கைதான். அந்தக் கற்பனை அழகானதுதானே. இப்படி அவள் எடுத்துக்கூறி இருக்கிறாள். எனக்கு அந்தக் கற்பனை எழ வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நான் எங்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/163&oldid=772880" இலிருந்து மீள்விக்கப்பட்டது