பக்கம்:நனவோட்டங்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ९ ग्रा. சீனிவாசன் படித்தாலும் ஒன்றுதான். அங்குப் படித்தால் ஒரு வேளை அவன் நினைவுகள் என்னை வாட்டியிருக்கும். இங்கே அந்த நினைவுகள் எழ வாய்ப்பில்லை. தனிப்பட்டவருக்கு ஏற்படும் துன்பங்கள் கூட்டத்தில் பழகும்போது தானாக மறைந்து விடுகின்றன. அதற்காகவே படிப்பு அவசியம் என்று பட்டது, இப்படி அவள் தன் கல்லூரிப்படிப்பின் அவசியத்தையும் ஆரம்பத்தையும் எடுத்துச் சொன்னாள். பாரத நாட்டில் இப்பொழுது ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டுவிட்டது. மகளிர் பெற்றோர்களுக்குச் சுமையாக இருக்கமாட்டார்கள். வயிற்றில் கிடக்கும்பொழுது தாய்க்குச் சுமை. வளர்ந்த பிறகு தந்தைக்குச் சுமை. கட்டிக்கொண்டு வெளியேறும்போது கணவனுக்குச் சுமை. அது பழைய காலமாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்று பெண்கள் யாருக்கும் சுமையாக இருக்கப் போவதில்லை. நாங்கள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் எங்கள் பிரச்சனை பாதிதீர்ந்தது" என்று சொன்னாள். அவள் சொன்னது உண்மைதான். எங்கள் ஆபீஸில் நான்கில் இரண்டு பேர் அவர்கள்தாம். ஆபீஸும் நன்றாகத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பாக வேலையும் நடக்கிறது. அவர்களின் ஒருத்தியாகத்தான் உஷா இடம்பிடித்து விட்டாள். அங்கேயே நிற்கவில்லை. என் வாழ்க்கையிலும் அவளுக்கு ஒர் இடம் தந்துவிட்டேன். ஆனால் அவளுக்குச் சமூகத்தில் இடம் கிடைக்குமா? அதுதான் என்கதையில் முக்கியமான சிக்கல். அது போகப் போகத்தான் தெரியும். 12|| என் மனம் ஒரு நிலையில் இல்லை. சல்னம் என்பதன் அர்த்தத்தை இப்பொழுதுதான் உணரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/164&oldid=772881" இலிருந்து மீள்விக்கப்பட்டது