பக்கம்:நனவோட்டங்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 163 தாடங்குகிறேன். நான் என் நெஞ்சை அவளிடம் றிகொடுத்து விட்டேன். எந்தத் தவறையும் யாரும் உடனே 'சய்து விடுவதில்லை. அதற்கு வேண்டிய அடிப்படைகளும் மல்லத்தான் உருவாகின்றன. மனிதன் தவறாமல் இருக்க ஒரு குறள் போதுமே! அது போதவில்லை என்று 'தரிந்துதான் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்கள் rழுதினார் என்பதைத் தெரிந்து கொண்டேன். அகிலனின் சித்திரப் பாவை படித்து இருக்கிறேன். எப்பொழுதோ டித்திருக்க வேண்டிய நாவல் படிக்கத் தவறிவிட்டேன். ாவலுக்குப் பரிசு கொடுப்பது எவ்வளவு அவசியம் என்பது பின்னர்தான் தெரிந்தது. அந்த நாவலுக்குப் பரிசு கொடுத்ததால்தான் அதைப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்தார்கள். எவ்வளவு உயர்ந்த கருத்துகள் ாட்டில் பரவின. அந்த நாவலுக்குப் பரிசு கொடுத்தது சரியில்லை ான்றும் வாதித்தார்கள். அதற்காக வாசகர்கள் அரங்குகளும் விவாதமும் நடத்தினார்கள். அவருக்குக் கொடுத்திருக்கக் கூடாது, இவருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று வாதிட்டார்கள் பலர். சிலர் கட்சிக் கண்னோட்டத்தில் அவரை எதிர்த்து முணகிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தமிழ்ப்பற்று எங்கோ போய்விடுகிறது. இந்திய நாட்டில் ஒரு தமிழ் எழுத்தாளன் பரிசு பெற்றதைக் கண்டு ஒவ்வொரு தமிழனும் பெருமைப் பட வேண்டியதுதான். என்னைக் கேட்டால் பாரதிக்குப் படம் வைத்தது போல அவருக்கும் படம் வைக்கலாம் ான்று தோன்றுகிறது. ஒவியரிடம் சொல்லி ஒரு படம் ாழுதச் சொல்லி இருக்கலாம். அகிலனின் கைவண்ணம் முழுவதையும் அச்சித்திரப் பாவையில் காண முடிகிறது. பரிசு பெற்ற பிறகுதான் படித்தேன். அதில் அவள் அதுதான் ஆனந்தி மற்றொரு வனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவள் தாலியை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/165&oldid=772882" இலிருந்து மீள்விக்கப்பட்டது