பக்கம்:நனவோட்டங்கள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 .ே ரா. சீனிவாசன் கையில் கழற்றிக் கொடுத்துவிட்டாள். சமுதாயச் கட்டுப்பாட்டுக்கும் வள்ளுவர் குறளுக்கும் அஞ்சித்தான் அவனுக்கு அதுதான் மாணிக்கத்துக்கு அவள் தன் உடலைக் கொடுத்து விட்டாள். உள்ளத்தைக் கொடுக்க முடியவில்லை. உஷா சொன்னாள். ஆரம்பத்தில் என் உள்ளத்தை முழுவதும் அவனுக்குக் கொடுத்திருந்தேன். 'தெய்வம்' என்றால் என்ன என்பதை நான் கண்டதில்லை. கணவனிடம் அந்தத் தெய்வத் தன்மையைக் காண முயன்றேன். அவனிடம் பேய்க் குணம்தான் வெளிப் பட்டது. யாருக்கு இதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மேலும் அவள் தொடர்ந்து சொன்னாள். அவன் என்னை அன்பாக நடத்திப் பார்த்ததே இல்லை. அன்பு என்பது என்ன என்று அவனிடம் கற்றுக்கொள்ள முடியவில்லை. தலையில் பூச்சூடி இருப்பேன்; யாரை மயக்க என்று கேட்பான். "உன்னைத்தான்” என்பேன். "அதற்கு வேறு யாரையாவது பாரு" என்று சகஜமாகச் சொல்லி விடுவான். எதைப் பேசுவது எப்படிப் பேசுவது என்பதே அவனுக்குத் தெரியாது. அவன் வாழ்க்கையில் எதையோ பறிகொடுத்தவனாகக் காணப்பட்டான். கடைசியில் அவன் வீட்டைவிட்டு நான் வெளியேறியபோது பயங்கரமான இரவு. விக்கி விக்கி அழுதேன். என் கண்கள் சிவந்தன. கோபத்தால் சிவக்க வேண்டிய கண்கள் அன்று அழுகையால் சிவந்தன. அந்த வீட்டில் என் ஒருத்திக்குத்தான் இடம் இல்லையா என்று கேட்டேன். அவன் செவிகள் அன்று செவிடாகி விட்டன. கண்கள் குருடாகி விட்டன. அறிவு மங்கிவிட்டது. "உனக்கு என்னடி நீ எப்படியும் பிழைக்கலாம். உன் அழகே போதுமே” என்றான். அப்பொழுதுதான் என் அழகு அவனுக்குப் பயன்படாது என்பதை உணர்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/166&oldid=772883" இலிருந்து மீள்விக்கப்பட்டது