பக்கம்:நனவோட்டங்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 165 இன்றும் அந்தத் துன்பக் காட்சிகளைச் சொல்லி என்ன பயன்; என்னை நன்றாக வாழ்வேன் என்றுதான் நம்பி வாழ்த்தினார்கள். மறுபடியும் கூட்டி ஒரு அழைப்பிதழை விடுத்து அவர்கள் முன்னிலையில் நான் ஏன் விவாக ரத்து செய்யக்கூடாது என்று நினைத்தது உண்டு. அதைப்போல் யாரும் செய்தது இல்லை. கண்ணகிக்கு முன் யாரும் அரசு அவைக்களத்தில் சென்று வழக்குத் தொடுத்தது இல்லை. எனக்கு நீதி மன்றங்களுக்குச் செல்வதில் நம்பிக்கை இல்லை. என்ன பெறமுடியும்? அவனிடம் மாதம் இவ்வளவு தரவேண்டும் என்று வாதாடி வெற்றி பெறலாம். தியாகபூமி கதையும் அப்படித்தான் முடிகிறது. ரீதர் வழக்குத் தொடுத்தான் என்று நினைக்கிறேன். அவன் தியாகபூமியில் அடியெடுத்து வைத்தான். அந்தக் கதை கவனத்துக்கு வரவில்லை. எங்கே அந்தக் கதைகள் முழுவதும் கவனத்துக்கு வருகிறது. "அவன் படித்தவன்தானே" "பட்டம் வாங்கியவன்" "அப்படி என்றால்?” "பட்டத்துக்காகப் படித்தவன். பண்புக்காகப் படிக்க வில்லை." மேலும் விளக்கினாள். அவன் படிப்புத் திட்டத்தில் ஒரு பெரிய குறை இருந்தது. ஆண்களும் பெண்களும் பழகுவதற்கே வாய்ப்பு ஏற்பட்டது இல்லை. வெறும் ஆண்கள் படிக்கும் கல்லூரியில் அவன் படித்தவன். அதனால்தான் அவன் பண்பு பெறவில்லை. இன்று கல்வித் திட்டத்தில் சமூக சேவை என்று புகுத்தியிருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் சேவை செய்வதில் ஒன்றுபடுகின்றனர். இந்த ஆண் பெண் பழக்கத்தைப் பயங்கரமாகத் தீட்டி இருந்தார்கள். எந்தப் பெண்ணோடும் தனிமையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/167&oldid=772884" இலிருந்து மீள்விக்கப்பட்டது