பக்கம்:நனவோட்டங்கள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 : ரா. சீனிவாசன் பழகினால் கெட்டுவிடுவார்கள் என்ற கற்பனையில் பழக்கினார்கள். அத்தகைய போக்கில் அவன் பழகினான் அவன் வீட்டில் தங்கையோடு பிறந்திருந்தால் அவன் பண்பட்டு இருப்பான்; அந்த வாய்ப்பும் அவனுக்கு: கிடைக்கவில்லை. அன்பு என்பது என்ன என்பதை அவன் அறியாதவனாக வாழ்ந்துவிட்டான். வாலைக்குழைக்கும் நாயைக்கூட அவன் தடவிக்கொடுக்க மாட்டான் கல்லெடுத்துத்தான் பழக்கம். அவன் அன்பின்மைக்கு அவளுக்குத் தோன்றிய காரணங்களைச் சொல்லி வந்தாள். தங்கையோடு பிறந்தவர்களே அன்பு செலுத்துகிறார்கள் என்பது உறுதியில்லை என்பது என் அனுபவம். இதெல்லாம் தனிப்பட்டவரின் பழக்க வழக்கங்களைப் பொறுத்தது என்பது என் கருத்து. - அவன் பணம் உடையவளை மணம்செய்து கொண்டிருந்தால் வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருப்பான் வாழ்க்கை வசதிகளில் மயங்கும்பொழுது அவளைப்பற்றி அவன் கவலைப்படத் தேவை இல்லை. அழகு என்பது எப்படி இருக்கும் என்று தேடிக்காண முடியாத பெண்களிடம் அமைதியாகத் தாம்பத்திய வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்றால் என்ன அர்த்தம். அவனுக்கு அவளைப் பற்றிச் சிந்திக்க நேரம் இருப்பதில்லை. அவனைக் கவர்வதற்குப் பல விஷயங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. பணம் அவனை மேலோட்டமாக வாழச்செய்கிறது. அந்த வசதிகளை நான் உண்டாக்கித்தர முடியவில்லை. தனக்கு அழகிய மனைவி இருக்கிறாள். அது போதும் என்று மன நிறைவு கொள்ளவேண்டியவன் தனக்கு எது எது இல்லையோ அதை நினைத்துப் போராடி அவற்றை அவள் கொண்டு வந்துதரவில்லை என்று நினைத்து அலுப்பும் அங்கலாய்ப்பும் கொள்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/168&oldid=772885" இலிருந்து மீள்விக்கப்பட்டது