பக்கம்:நனவோட்டங்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 167 மணவாழ்க்கை எல்லா வகையான இன்பங்களை அனுபவிக்க என்ற தவறான கருத்துப் பலரிடம் குடிகொள்வதால் இந்தத் தொல்லைகள் ஏற்படுகின்றன. இன்பம் என்பது எல்லா வாழ்க்கையிலும்தான் இருக்கிறது. மண வாழ்வில்தான் இன்பம் இருக்கிறது என்று நினைப்பதால் தான் இந்தத் தவறுகள் ஏற்படுகின்றன. துன்பத்தையும் இன்பமாகக் காணும் மன அமைதி மணவாழ்க்கையில் ஏற்படுகிறது. அவ்வளவுதான் கூறமுடியும். துன்பத்தைத் தாங்கும் சக்தி மணவாழ்வில் ஏற்படுகிறது. இதை உணர்ந்து வாழ்பவருக்கு மண வாழ்வு நிறைவைத் தரும். அவன் அதை உணராதவனாகிவிட்டான். அவள் தன் வாழ்வின் வரலாற்றை ஆதியோடு அந்தமாகப் பத்திரிகைத் தொடர்கதை போல விட்டு விட்டுச் சொன்னாள். இடையிடையே சில வாழ்க்கைத் தத்துவங்களையும் சேர்த்துச் சொன்னாள். அது கதாசிரியனுக்கு உரிய பண்பு; அது அவளிடமும் அமைந்து கிடந்தது. அவள் அதைச் சொன்னதும் எனக்குப் பல வாழ்க்கைச் சித்திரங்கள் நினைவுக்கு வந்தன. முன் பெல்லாம் ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன். வைர மோதிரம் வாங்கித் தராவிட்டால் தீபாவளிக்கு மாப்பிள்ளை வர பிகு பண்ணுவதைச் சித்திரங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. அவை வெறும் வேடிக்கை என்று நினைத்து வந்தேன். இன்னும் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் அவள் வாழ்க்கையில் ஏற்பட்டு இருந்தன. அவற்றை எல்லாம் அவள் அப்பொழுது சொன்னது இல்லை. சொல்ல விரும்பவும் இல்லை. அந்த அனுபவங்களை அவள் மனத்தில் போட்டு வைத்தாள். நான் சொல்லிப் பார்த்தேன். மறுபடியும் அவனோடு வாழ்க்கை நடத்துவதுதான் நல்லது என்று. அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/169&oldid=772886" இலிருந்து மீள்விக்கப்பட்டது