பக்கம்:நனவோட்டங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 15 ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையைப் பற்றி விளக்குவதாக இருக்கவேண்டும். என்ன வாழ்க்கை. என்னமோ எழுதுகிறார்கள். நானும் படிக்கிறேன். படிக்காமல் என்ன செய்வது. ஒன்று படிக்க வேண்டும். இல்லாவிட்டால் எழுதவேண்டும். இரண்டாவது எனக்குத் தெரியாது. முதலாவது தான் என்னால் செய்ய முடியும், எனக்கு அப்படி ஒன்றும் எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. நன்றாக எழுதுகிற வர்கள் எழுதவேண்டும். நாமெல்லாம் படித்தால் போதும். நாம் புகுந்து எழுதி எழுத்தைக் கெடுக்கக்கூடாது என்று நினைப்பவர்களுள் நானும் ஒருவன். இந்த எழுத்தாளர்களுக்கு என்னைப் பார்த்தால் நான் எழுத்தாளன் அல்ல என்பதைக் கண்டு கொள்வார்கள்; இவன் ஒரு காதல் பைத்தியம்' என்று தப்புக் கணக்குப் போடுவார்கள் அவர்களைப் போலவே நானும் சூழ்நிலையை மறந்து வாழ்வதால், 2 எங்கேயோ தொடங்கினேன். தொடங்கியதை என்னால் முடிக்கவில்லை. தொடர்கதை படிப்பதனால் வந்த பழக்கம் அது என்று நினைக்கிறேன். அந்தத் தியேட்டருக்குப் போனேன். பழைய தியேட்டர்; புதிய படம். இது ஆச்சரியமாகத்தான் இருக்கும். புதிய படங்களெல்லாம் பழைய தியேட்டருக்கு மிக வேகமாக வந்து சேர்ந்து விடுகின்றன. பழைய படங்கள் புதிய தியேட்டருக்குள் சர்வ சாதாரணமாகப் புகுந்து விடுகின்றன. படவுலகில் இது ஒரு பெரிய புரட்சி. "புரட்சி மிகப் பழைய சொல்; பழகிப்போன அர்த்த மில்லாத சொல், இன்னும் இப்படித்தான் சொல்லிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/17&oldid=772887" இலிருந்து மீள்விக்கப்பட்டது