பக்கம்:நனவோட்டங்கள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ரா. சீனிவாசன் சொல்லுகிறாள். 'அவனைப் பொறுத்தவரை என் உடலைத்தான் கொடுக்க முடியும்." "அதைக்கூட ஏன் கொடுக்க வேண்டும்? அதனால் என்ன பயன்? அவன் மிருக உணர்வுகளைத்தானே நான் வளர்ப்பேன். அவனை உயர்த்த முடியாமல் தாழ்த்துவதால் என்ன பயன்? மிருக உணர்வும் அவசியம்தான். ஆனால் அதுவே தொடக்கமும் முடிவும் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது." "இச்சைக்காகத்தான் நான் வாழ வேண்டுமென்றால் அதைவிட நஞ்சு உண்டு சாக விரும்புகிறேன்” என்று பச்சையாகச் சொன்னாள். "அதற்கு மேல் அவளிடம் எப்படி வாதிடுவது." இதெல்லாம் பழைய கதை; இந்தப் படிகளை எல்லாம் கடந்ததால்தான் இப்பொழுது ஒரு முடிவில் வந்து நின்றோம். மறுபடியும் நாங்கள் பலர் அறிய மணம் செய்து கொள்வதாக யாரிடம் எப்படி இதைச் சொல்வது என்ற பிரச்சனையில் ஆழ்ந்து விட்டேன். ஒவியர் ஒரு முறை சொன்னார் வாழ்க்கையில் போராட்டமும் அதிருப்தியும் இருக்கும் வரைதான் அது வாழத்தக்கதாக அமைகிறது. மனநிறைவு ஏற்பட்டு விட்டால் அப்புறம் அழிவுதான் என்று சொல்லி இருக்கிறார். என் வாழ்வில் மன நிறைவு ஏற்படாமல் இருக்கச் சரியான சிக்கலில் மாட்டிக்கொண்டேன். ரொம்பவும் தொல்லை கொடுக்கிற நோய் 'ஆஸ்த்துமா என்று சொல்லுகிறார்கள். அதனால் ஆயுள் நீட்டிப்பும் உண்டு என்று கூறுகிறார்கள். அதே போலத்தான் இந்த மாதிரி இழுபறிப் பிரச்சனைகள் என்று நினைக்கிறேன். நான் ஒரு ஆஸ்த்துமா நோயாளிபோல் இருப்பதாக இப்பொழுது எல்லாம் நினைப்பது உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/170&oldid=772888" இலிருந்து மீள்விக்கப்பட்டது