பக்கம்:நனவோட்டங்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 8 169 நோய் வரும்பொழுதுதான் உடம்பின் அருமையே தெரிகிறது. ஒவ்வொரு நோயையும் தீர்த்து அதைச் சரிப்படுத்த விரும்புகிறோம். அதே போலத்தான் இந்த நிலைவந்தபிறகுதான் வாழ்க்கையைப் பற்றிய குறைகள் கண்முன் வருகின்றன. நோய் முற்றி விட்டால் வைத்தியரிடம் சென்றால் அவர் அறுவைச் சிகிச்சைக்கு சிபாரிசு செய்கிறார். அது தவறா? என்னைப் பொறுத்த வரை நான் டாக்டர் என்று என்னைப் பற்றி நினைத்துக் கொண்டேன். அவளோடு பழகிய பிறகு நானும் ஒரு நோயாளியாகி விட்டதை உணர முடிந்தது. என் நோய் தீர அவள் அவசியம் என்ற நிலை வந்த பிறகுதான் அந்தத் தவறைச் செய்தேன். அவள் இல்லாமல் நான் வாழ முடியாது என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. புரட்சியில் தொடங்கிய என் வாழ்க்கை காதலில் அடிவைத்தது. பிறகு அவளே மனம் மாற்றிக் கொண்டிருந்தால், அதாவது அவனோடு வாழ முடிவு செய்து கொண் டிருந்தால், நிச்சயமாக அவளைத் தடுத்து விட்டு இருப்பேன். எனக்கு உயிர்ப் பிச்சை கேட்டு இருப்பேன். நான் மிகவும் தாழ்ந்து விட்டு இருப்பேன். வல்லார் முன் சொல் வல்லேன். இப்பொழுது அவள் முன் மென்மையுற்று விட்டேன் என்ற நிலை வந்து சேர்ந்து விட்டது. இந்த முப்பது ஆண்டுகளாக இந்த ஒரு வாழ்வுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேனோ தெரியாது. கடலிலே தோன்றும் முத்து அணிபவர்க்குச் சொந்தம்; யாழிலே பிறக்கும் இசை கேட்பவர்க்குச் சொந்தம்; மலையிலே கிடைக்கும் சந்தனம் பூசிக் கொள்பவர்க்குச் சொந்தம் என்று எங்கோ எப்பொழுதோ படித்திருக்கிறேன். அவள் எனக்கு முத்தாகவும், இசையாகவும், மணமாகவும் விளங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/171&oldid=772889" இலிருந்து மீள்விக்கப்பட்டது