பக்கம்:நனவோட்டங்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ( ரா. சீனிவாசன் காதற் காவியங்கள் எல்லாம் என் உள்ளத்தின் உணர்வுகளில் தீட்டிக்காண முடிந்தது. அவள் இல்லாமல் நான் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். நீரில் நீந்தத் தொடங்கிய பிறகு கைகளுக்கு ஒய்வு கொடுக்க முடியுமா? நீந்துவதில் இன்பம் இருப்பதால் தானே திரில் குதித்து விளையாடுகிறோம். வாழ்க்கை ஒரு நீச்சல் குளம் என்றால் அதில் நீந்துவது ஒரு மகிழ்ச்சியைத் தந்துதான் தீரும். அவளும் என்னோடு நீர் தெளித்து ஆடிப்பாடி விளையாடுகிறாள். தனிமை என்பது சுகம் தரும் என்று ஞானிகள் கூறி இருக்கிறார்கள். உண்மைதான் நாங்கள் இருவரும் இருக்கும் தனிமை அதைத்தான் தந்து இருக்கிறது. என் மனச் சான்றுக்கு ஒய்வு கொடுத்து விட்டேன். காரண காரியங்களை ஆராய்ந்து கொண்டிருக்க என்னால் முடியாமல் போய்விட்டது. யார் தவறு? எது தவறு என்று எண்ணுவதுதான் தவறு என்ற நிலைக்கு வந்துவிட்டேன். அவள் இல்லாமல் நான் வாழ முடியாது. நான் இல்லாமல் அவள் வாழ முடியாது. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் விட்டு விட்டு அவளைத் தேடிச் செல்வது ஏன்? அவள் மலர்ந்த முகத்தைக் காணும்போது, ஏன் என் இதயம் மலரவேண்டும். அவளும் சொல்கிறாள் என்னைப் பிரிந்து இருக்க இயலவில்லை. வாரம் ஒரு முறையாவது என்னைப் பார்க்கத் துடிக்கிறாள். நாளுக்கு ஒரு முறையாவது என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொள்கிறாள். அந்தத் தொலைபேசிக்கு அவளால்தான் அந்த இனிமை உண்டாயிற்று. என் சொற்கள் ஏன் அந்தத் தொலை பேசியின் காதுகளோடு உறவு கொள்கின்றன. அவை என்னிடம் இரகசியம் பேசுகின்றன. அவள் பேசும் பொழுது நான்தான் அவற்றைக் கேட்க முடியும். தொலைபேசியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/172&oldid=772890" இலிருந்து மீள்விக்கப்பட்டது