பக்கம்:நனவோட்டங்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன கவாட்டங்கள் 0 171 ஏன் காதலர்கள் அவ்வப்பொழுது பேசுகிறார்கள் என்பதை அப்பொழுதுதான் உணர முடிகிறது. அவளிடம் பேசும் பொழுது மட்டும்தான் என் குரல் மென்மை அடைகிறது. கத்தாது; சத்தம் இல்லாமல் பேச முடிகிறது. முன்பெல்லாம் தொலைபேசியில் யாராவது குறுக்கிட்டுப் பேசுவார்கள். அது சில சமயம் காதல் பேச்சாக இருக்கும். அது காது கொடுத்துக் கேட்காமல் இருக்க முடிவது இல்லை. நான் சலனமுள்ளவன்தான். அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்க முயல்வேன். அதற்குள் அவர்கள் கீழே வைத்து விடுவார்கள். இனி நான் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கெட்டவன் என்ற பெயர் எடுக்கத் தேவை இல்லை. நானே கெட்டவனாகி விட்ட பிறகு பிறர் எப்படிக் கெடுக்கிறார்கள் என்பதை ஏன் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். கண்டு கேட்டு உண்டு உற்று இன்னும் என் னென்னவோ படித்திருக்கிறேன். இந்த ஐந்து இன்பங்களும் ஓசை இன்பமாக உருவெடுக்கும் என்பதைத் தொலை பேசியில்தான் கண்டு கேட்டு உணர்ந்து உற்று அறிந்து இருக்கிறேன். நான் ஆபீசிலிருந்து பேசுவதில்லை. ஏன் அவளோடு நான் ஆபீசில் இருப்பதால்தான். நான் வீட்டில் இருப்பதே அவளோடு தொலைபேசியில் பேசுவதற்குத்தான். அதற்காகவே அவள் சினேகிதி வீட்டில் சென்று பேசுவாள். அங்கேதான் அவளுக்கு அந்த வசதி கிடைத்தது. என் மாமனார் மாஜி இன்ஸ்பெக்டர்தானே. அவருக்கு போனைக் கண்டாலே ஒரு அலர்ஜி இரவு தூக்கங்களை யெல்லாம் அவை கெடுத்துவிட்டன. போனுக்கும் போலீசுக்கும் நெருங்கிய தொடர்பு. அதனால் அவருக்கு அதைக் கண்டாலே பிடிக்காது. இந்தத் தொலைபேசி பழங்காலத்தில் கண்டுபிடித்து இருந்தால் தமிழில் தூது இலக்கியங்களே தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/173&oldid=772891" இலிருந்து மீள்விக்கப்பட்டது