பக்கம்:நனவோட்டங்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ரா. சீனிவாசன் இருக்காது என்று நினைக்கிறேன். பேசாத நண்டோடும் கேளாத வண்டோடும் பேசியதாகக் கவிதைகள் படித்து இருக்கிறேன். 'கானலும் கழறாது, கழியும் கூறாது, புன்னையும் மொழியாது; அன்னமும் செப்பாது, மயிலும் சொல்லாது; நீதான் சொல்ல வேண்டும் என்று தலைவி ஒருத்தி பாடியதாகக் கவிதை படித்திருக்கிறேன். சித்திராங்கதை மேகத்தைத் தூது விட்டு அர்ச்சுனனுக்குச் செய்து செப்பினாள். கிளியைத் தூது அனுப்பி அழகரின் மாலையைக் கொண்டு வரும்படி ஒரு தலைவி சொன்னதாகப் படித்து இருக்கிறேன். இந்த அருமையான கருவி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் என்னதான் பேசினோம் எவ்வளவு நேரம் பேசினோம் என்பதை எப்படி எடுத்துக் கூற முடியும். அந்த மாதம் அவர்கள் பில் அனுப்பிய பிறகுதான் அதன் தண்டனை என்ன என்பதை உணர முடிந்தது. இந்த இன்ப அலைகளில் நாங்கள் தத்தளித்துக் கொண்டு இருந்தோம். அதே சமயத்தில் புற நிகழ்ச்சிகளின் கொத்தளிப்பில் அகப்பட்டு அவதியுற்றோம். எங்கள் பயணம் நீண்ட பயணம்; ஆனால் நிலைத்த பயணம். தனித்துச் சென்றால்தானே துன்பம். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் துடுப்புகளை இருவரும் தள்ள எங்கள் படகு அசைந்து ஆடிச் செல்லும். அதே சமயத்தில் சூறாவளியும் காற்றும் அலைகளும் மோதத்தான் செய்யும். அந்த நிலையில் படகைச் செலுத்துவதில்தான் எங்கள் திறமையும் ஆற்றலும் இருக்கின்றன. சுழியில் படகு சிக்கித் தவிக்கும்போது ஏன் ஏறினோம் என்று எண்ணத்தான் செய்கிறோம். சுழிகள் எப்பொழுதும் நீடித்து இருப்பது இல்லை. அதைக் கடந்து சென்று விட்டால் படகு ஆடி அசைந்து கரை சேரும். எங்கள் காதற்பயணம் தொடங்கியபோது அவளே அதற்காக வருத்தப்பட்டாள். அவள் ஆபீசு வேலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/174&oldid=772892" இலிருந்து மீள்விக்கப்பட்டது