பக்கம்:நனவோட்டங்கள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 173 இராஜிநாமா செய்துவிட்டாள். அதைப் பற்றிக் கேட்டது அநாகரிகமாகப்பட்டது. மறுபடியும் அவள் என் கீழ்க் குமாஸ்தாவாக இருக்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். அதில் அவசியமில்லாமல் வேறுபாடு தோன்றத்தான் செய்கிறது. அவளோடு நான் ஒன்றிவிட்ட பிறகு உத்தியோகத்திலும் அவள் தாழ்ந்து போவதை நானும் விரும்பவில்லை. 'கூட்டு ரோடு என்று சொல்லுவார்கள். நாலு தெருக்கள் சந்திக்கும் அகலமான பாதை அது. சாலைகளும் கூடும்; அங்கு வரும் மக்களும் கூடிப் பிரிவார்கள். உந்து வண்டிகள் நிற்கும்; அது ஒய்வு எடுத்துக் கொஞ்ச நேரம் அந்த இடத்தை விட்டு நகர மறுக்கும். ஒரு சிலர் பஸ் மாறுவதற்காகவும் இறங்குவார்கள். அங்கே 'டீ கடைகள் சமூக சேவை செய்யும். பழைய ரேடியோ பெட்டி கிராமபோன் பெட்டியைப் போல அலறும் குரலில் பாடிக்கொண்டு இருக்கும். பீடிக்கு நெருப்புக் கேட்டுப் பற்ற வைக்கும் இளைஞர்கள் பக்கத்தில் போஸ்டரைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். - டீக்கடைகள் என்னைக் கவர்ந்தது உண்டு. ஒவியர் குப்பத்து டீக் கடை நினைவும் வருவது உண்டு. இது மக்கள் கட்சி என்று நினைப்பது உண்டு. சிங்கிள் டீ என்று கத்துவான். வேண்டுமென்றே நான் டபுள் டீ கேட்டது உண்டு. அவன் என் அறியாமையைத் திருத்துவான். 'கப் டீ தான் உண்டு என்று கூறுவான். Sheep - என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் பன்மைச்சொல் கிடையாது Sheepஎன்றுதான் கூறுவார்கள். அதே போலச் சிங்கிள் டீக்குப் பன்மை கிடையாது என்பதை உணர்ந்தேன். நான் அரை 'டீ குடித்து வாயை நனைத்துக் கொள்வது உண்டு. அதற்கு மேல் என் வாய் சும்மா இருக்காது. காய்ந்து போன வடையையும் உலர்ந்து போன முறுக்கையும் கடித்துச் சுவை பார்ப்பேன். எவ்வளவு சாப்பிட்டாலும் பயம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/175&oldid=772893" இலிருந்து மீள்விக்கப்பட்டது