பக்கம்:நனவோட்டங்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ). ரா. சீனிவாசன் நகரத்துப் பெரிய ஹோட்டல் போல அஞ்ச வேண்டிய தில்லை. அவர்களுக்கு எது லாபம் எது அசல் என்ற வேறுபாடே தெரிவதில்லை. எல்லாம் லாபம்' என்ற அளவில் பில் போடுகிறார்கள். பில் மிகுந்தால்தான் அந்த ஒட்டல்களுக்கே மதிப்பு. காய்ந்த வடையும் உலர்ந்த முறுக்கும் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவற்றைத் தவிடு பொடி செய்து முடிப்பேன். இதெல்லாம் எனக்கு ரொம்ப திருப்தி, அவர்களோடு பேச்சுக் கொடுப்பேன். அவர்களும் ஏதாவது பதில் சொல்லுவார்கள். என்ன பேசுவேன்? எப்படி உங்கள் வியாபாரம் என்பேன். எதோ சுமாராக நடக்கிறது என்று கூறுவார்கள். அந்தக் கூட்டுச் சந்தியில் இளைப்பாறுவதற்கு வசதியும் உண்டு; பலகை போட்டு இருப்பார்கள். குளிர்ந்த நிழலை அங்குக் குடிகொண்டிருந்த தூங்கு மூஞ்சி மரங்கள் தரும். அங்கு இளைப்பாறி ஓய்வு சிறிது எடுத்துக் கொண்டபிறகே என் வருகையை எதிர் நோக்கி இருக்கும் சுற்றமும் நட்பும் ஆகிய அந்த பஸ்ஸில் ஏறுவேன். எல்லோருடைய தலையையும் எண்ணிய பிறகுதான் கண்டக்டர் விசில் தருவார், மறுபடியும் என் பயணம் தொடரும். தலைகள் சரியாக இருக்கின்றன என்று தெரிந்த பிறகுதான் அவர் தலை அசைப்பார். அதற்கப்புறம் தான் வண்டியின் சக்கரங்கள் உருளும். உஷா தன் தொழிலுக்கு ஒய்வு கொடுத்து விட்டாள். சில நாட்களாகத் தொலைபேசியும் தொலைபேசியாகி விட்டது. அவள் குரலே கேட்க முடியாமல் போய்விட்டது. அவள் ஏதோ தவறு செய்தவளைப் போலக் காணப்பட்டாள். மறுபடியும் அவளுக்குச் சமூகம் பெரிய பூதமாகக் காணப்பட்டது என்று நினைக்கிறேன். சமூகத்தின் முன் நான் ஒரு சாதாரண வஸ்துவாகக் காணப்பட்டேன் என்று நினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/176&oldid=772894" இலிருந்து மீள்விக்கப்பட்டது