பக்கம்:நனவோட்டங்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 3 175 அவள் வீட்டுக்குப் போக முடிவது இல்லை. அவளும் என்னை வரவேற்கும் நிலையில் இல்லை. அப்பொழுது மிக பெரிய தவறு செய்த குற்றவாளி போல் ஆயினேன். அவள் வீட்டில் புதிய சூழ்நிலை உருவாகத் தொடங்கியது என்று நினைக்கிறேன். உஷாவின் தங்கைக்கு யாரோ பெண் வந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் போல இருந்தது. அப்பொழுதுதான் உஷா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டாள். எங்கள் உறவு அன்று வெளிப்படாத நிலை. அந்த நிலையிலேயே உஷாவின் வாழ்க்கை பரிசீலனை செய்யப்பட்டது. வருகிறவர்கள் உஷாவின் தங்கையைப் பற்றி விசாரிப்பது இல்லை. அவள் ஏன் வாழ வில்லை என்ற கேள்வியைக் கேட்டுத் தொல்லைப் படுத்தினார்கள். அவள் வாழ்க்கையைப் பற்றி வந்தவர்கள் மிக்க அக்கரை கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். அவள் ஏதோ தவறு செய்து இருக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையைக் கொண்டு அவர்கள் ஆராய்ச்சியும் குறுக்குக் கேள்விகளும் அமைந்தன. தங்கைக்கு மனமானதும் அவள் போவாள் என்று வீட்டிலே சமாதானம் சொல்லிப் பார்த்தார்கள். ஆராய்ச்சி என்பது தெரியாமல் இருந்து எதையும் தெரிந்து கொள்ள முயல்வது. இந்த மாதிரி விஷயங்களில் மட்டும் ஏற்கனவே ஒரு முடிவை மனத்தில் கொண்டு பிறகு ஆராய்ச்சி செய்கிறார்கள். தான் அந்த வீட்டில் இருப்பது எவ்வளவு பெரிய சுமை என்பதை அவ்வப்பொழுது உணர்ந்து வந்தாள். என்னைப் பற்றியும் பேச்சு நடந்திருக்கிறது. உஷா அவர்களைப் பேசவிட்டுத்தான் சும்மா இருந்திருக்கிறாள். எனக்கு வயது அதிகம் என்று பேசப்பட்டதாம். அதனால் எனக்கு அங்கிருந்து விடுதலை கிடைத்தது. அவர்கள் என்னை அதிகாரபூர்வமாக நிராகரித்து விட்டார்கள் என்று தெரிந்த பிறகு அந்தப் பெண்ணின் மீதே என் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/177&oldid=772895" இலிருந்து மீள்விக்கப்பட்டது