பக்கம்:நனவோட்டங்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 : ரா. சீனிவாசன் மேலோட்டமாகச் சென்றது. நான் அவளை ஒப்புக்கொண் டிருந்தால் இந்தப் பிரச்சனையில் அகப்பட்டுக் கொண் டிருக்கத் தேவை எழுந்திராது என்று எண்ணினேன். ஆனால் அந்தப் பெண் என்னைப் பொறுத்தவரை ஒரு நிழலாகவே பட்டாளேயன்றி ஒளியாகப்படவில்லை. இதற்கு முன்னால் சில நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன. அவள் ஸ்கூட்டர் வாங்கும்படி சிபாரிசு செய்திருந்தாள். பஸ்ஸில் நாங்கள் பயணம் செய்த நாட்களில் சில சிரமங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. நான் நின்று கொண்டே இருப்பேன். அவள் உட்கார்ந்து கொள்ள இடம் கிடைக்கும். ஆபீசர் நிற்க குமாஸ்தா உட்காருவது அங்கேதான் பார்க்க முடிந்தது. அங்கே நாங்கள் அப்படிப் பழகவில்லை; அந்த நினைப்புத் தோன்றவில்லை. உட்கார்ந்து பேச முடியாத நிலைமை சர்வ சாதாரணமாக இருந்தது. மற்றும் நாங்கள் அங்கே எப்படிப் பேச முடியும். மேலும் எங்கள் உறவு முற்றுகின்ற காலம்; அதற்கு ஸ்கூட்டரும் அவசியமாகப்பட்டது. அவள் என்னோடு ஸ்கூட்டரில் பயணம் செய்து இருக்கிறாள். அவளுக்கும் அந்தத் துணிவு வந்து விட்டது. அப்பொழுதுதான் அவனுக்கு அவளைப் பற்றிய அக்கரை ஏற்பட்டது. யாரோ சொல்லி இருக்கிறார்கள் இவ்ஸ் யார் பின்னாலேயோ போகிறாள் என்று. அதற்குப் பிறகு அவனுக்குப் புதிய அக்கரை பிறந்தது. அவளைத் தான் வைத்து வாழ முடிவு செய்து விட்டதாகவும், பணம் ஏதும் தேவை இல்லை என்றும் அவள் தன் வீட்டில் வந்து இருந்தால் போதும் என்றும் சொன்னானாம். தான் திருந்திவிட்டதாக இன்ஸ் பெக்டருக்கு நீண்ட கடிதம் எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பினானாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/178&oldid=772896" இலிருந்து மீள்விக்கப்பட்டது