பக்கம்:நனவோட்டங்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் ( 177 அவள் அப்பாவுக்கு இந்த உத்தியோகம் கிடைத்திருந்தாலும் அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். அவன் ஒற்றைக் காலில் நிற்கிறானாம். மற்றொரு கால் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அப்படிப் பேசிக்கொண்டார்கள் என்று தெரிகிறது. "நீ போக வேண்டும்; நீ போனால்தான் இரண்டாவது மகளுக்கு மணம் பேச முடியும்” என்று கணைமாரி தொடுத்தாராம். "நீ ஸ்கூட்டரில் போனது உண்மைதானே" "பஸ் கிடைக்கவில்லை" "அது தெரியும்" "ஹெல்மெட்டுப் போடவில்லை" "அதை நான் கேட்கவில்லை” "இல்லேப்பா அதுக்குத்தான் சார்ஜ் பண்ணுகிறீர்கள் என்று நினைத்தேன்.” "அது அல்ல. ஒரு ஆம்பிளை பின்னால் உட்காரலாமா ?” 'எல்லோரும் ஆம்பளைங்க பின்னால்தான் உட்காருகிறார்கள்." "ஒரு ஆம்பளை” அந்த ஒரு என்ற சொல்லுக்கு அர்த்தம் இருப்பதைக் காண முடிந்தது அவளால், "முதலில் நீ ரிசைன் செய்ய வேண்டும்." அதுதான் காரணம் அவள் வேலையை விட்டதற்கு என்று நினைக்கிறேன். உண்மை? அது எனக்குத் தெரியாது. அதற்கப்புறம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. நான் மனம் அமைதி இழந்தேன். மறுபடியும் கூட்டு ரோடுக்குப் போவது போன்ற அனுபவம் ஏற்பட்டது. கொஞ்சம் ஒய்வு எடுப்பது நல்லதுதான். அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/179&oldid=772897" இலிருந்து மீள்விக்கப்பட்டது