பக்கம்:நனவோட்டங்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ரா. சீனிவாசன் கொண்டிருப்பார்கள். உண்மையான புரட்சியைப்பற்றி அறிகிறவரை, சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் புரட்சி புரட்சி என்று சொல்வது சகஜமாகி விட்டது. ஒருவன் ஒருத்தியைக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்வான். அவன் உடனே தன் வாழ்க்கையில் பெரிய புரட்சி செய்து விட்டதாகக் கூறுவான், சாதியை விட்டு மற்றொரு சாதிப் பெண்ணை மணந்துகொள்வான். அதுவே அவன் அன்றாடப் பேச்சாக இருக்கும், தன்னைப் போலப் புரட்சி, யாருமே செய்ய முடியாது என்று கூறுவான். தமிழிலே கையெழுத்துப் போடுவான், இது பெரிய புரட்சி என்று கூறுவான். இதெல்லாம் வாழ்க்கையில் ஒருவன் மேற்கொள்ள வேண்டிய சாதாரண நிகழ்ச்சிகள். இதைப் புரட்சி என்றால் எது புரட்சி என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடுகிறது என்பதுதான் என் அபிப்பிராயம். ஒரு சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதால் அது தன் பொருளை இழந்து விடுகிறது என்பதுதான் இந்தச் சொல் எனக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம். 'காதல் இதுவும் அழகான சொல். இந்தச் சொல்லை அடிக்கடி நான் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். அது ஒரு 'பருவம்' என்று நினைக்கிறேன். பருவத்துக்கேற்பச் சொற்கள் வரும் என்று நினைக்கிறேன். ஒரு சிலர் இதே இந்தப் பருவத்திலேயே பத்தி 'முத்தி என்று பேசுவதும் வியப்பாக இருக்கிறது. என்னமோ இந்த இரண்டு சொற்கள் என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டு இருந்தன. புரட்சி நான் என்ன செய்யப் போகிறேன். ஏதாவது தவறு செய்து விட்டு உடனே அது புரட்சி என்று சொல்லிவிடுவேன் என்று நினைக்கிறேன். மலையாளப் படங்கள் பல வெளி வந்து கொண்டு இருந்தன. அதைத் தமிழ் மக்கள் பாராட்டினார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. பட வுலகில் ஒரு மாற்றம் என்று நினைக்கிறேன். நான் யாரைக் காதலிக்கப் போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/18&oldid=772898" இலிருந்து மீள்விக்கப்பட்டது