பக்கம்:நனவோட்டங்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 9 179 "என்னம்மா சொல்றே" "வக்கீலைப் பார்க்கணும்" "விவாகரத்து செய்தால் மெயின்டனன்ஸ்தான் கேட்க முடியும்.” "அவனிடம் அதையும் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு விடுதலை அளிக்க விரும்புகிறேன்." "அப்புறம் அவனைப் பிடிக்க முடியாது. அவன் வேறு கலியாணம்...!" "தங்கையை அவனுக்குக் கொடுத்து விடப்பா" எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவள் ஏன் இந்த முடிவுக்கு வந்தாள். - அவள் சொன்னாள், "அப்பா நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என் தங்கைக்கு மணம் செய்விக்க வேண்டும். அதற்கு ஒரு வழி இதுதான்" அதற்கு மேல் அவள் விளக்கவில்லை. "அவனுக்கு மனைவி தானே வேண்டும்" "என்னம்மா சொல்றே" "அப்பா: இந்தக் குடும்பம் தாழக் கூடாது என்பதில் எனக்கு அக்கரை இருக்கிறது" “அதற்காக” "அவன்தான் அவளுக்கு ஏற்றவன்" “என்னம்மா' 'அவன் திருந்திவிட்டான். மனைவியைப் புறக்கணித்தால் அவள் என்ன ஆவாள் என்பதை என் வாழ்வில் அவன் பாடம் கற்றுக்கொண்டான். தெரிந்துதான் ஒரு ஆம்பளையின் பின்னால் ஸ்கூட்டரில் சென்றேன். அவன் அதைக் கண்டு உள்ளம் புழுங்க வேண்டும். பெண்ணுக்கும் இந்த நாட்டில் சம உரிமை உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/181&oldid=772900" இலிருந்து மீள்விக்கப்பட்டது