பக்கம்:நனவோட்டங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 0 ரா. சீனிவாசள் என்பதை அவன் உணரச் செய்ய வேண்டும். சம உரிமை என்பது தவறு செய்ய அல்ல; வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள, பெண்ணை ஒதுக்கித் தள்ளினால் அவள் வாழமாட்டாள் என்று நினைத்தான். அவன் எனக்குச் சமூகத்தில் கொடுத்த அந்தஸ்து வாழாவெட்டி என்பது. எனக்கும் வாழ்க்கையில் மற்ற பெண்களைப் போலச் சம அந்தஸ்து பெறமுடியும். அதற்காகச் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது; அதை விளம்பரப்படுத்தத்தான் பகிரங்கமாக ஒருவன் பின்னால் சென்றேன்” என்றாள். அவனுக்கு ஒர் அதிர்ச்சி ஏற்பட்டு இருந்தது. அவன் செய்த தவறுகளை அவன் உணரத் தொடங்கினான். அவள் மேலும் என்னிடம் சொன்னாள். "இந்த விளைவை ஏற்படுத்திய பிறகுதான் துணிந்து உங்களோடு உறவு கொண்டேன் என்றாள். என் தங்கைக்கு மணம் செய்விப்பது என் கடமை; அவளுக்கு மணம் என்றால் நான் 'வாழா வெட்டி என்ற பட்டத்தினின்று விலக வேண்டும். சமூகத்தில் சம்பிரதாயம் கெடாமல் நானும் ஒரு சுமங்கலியாக (இது பெண்கள் பெறும் அந்தஸ்து வாழ்க்கை நடத்த வேண்டும். அதற்கு அவன் வழி செய்ய வில்லை. அவனுக்கு ஒர் அதிர்ச்சியை ஏற்படுத்திய பிறகு ஒரே கல்லில் இரண்டு காயை வாழ்த்தினேன் என்றாள். பெண்ணை அடக்கி ஒடுக்கிக் கொடுமைப்படுத்துவது எவ்வளவு தீமை என்பதைப் புரிந்து கொண்டான் அவன்." அவள் மேலும் என்னிடம் நிதானமாகப் பேசினாள். "நான் தெரிந்துதான் தங்களைக் காதலித்தேன். அதற்காக வருத்தப்படவில்லை, நிச்சயமாக நான் அவனோடு வாழ முடியாது. திருமண ஆல்பத்தை அவனுக்கு எப்பொழுதே தபாலில் அனுப்பி விட்டேன். அவன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கட்டும் என்று அனுப்பிவிட்டேன். அந்த வாழ்க்கை வெறும் நினைவுகளாக இருக்கட்டும். அதில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/182&oldid=772901" இலிருந்து மீள்விக்கப்பட்டது