பக்கம்:நனவோட்டங்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 181 பெண்ணின் கதையைக் காண்பான். வாழவேண்டிய பெண் ஒருத்திக்கு வாழ்க்கை தராவிட்டால் அவள் வெறும் நினைவுகளாகத்தான் நிலைப்பாள் என்பதை அவன் அறிந்து கொள்ளட்டும். நான் தாலியை அனுப்பவில்லை; அது எனக்குத் தேவைப்படுவதால், அதை அவனிடம் கொடுக்கவில்லை. அவன் அதற்கு மதிப்புத் தராததால்” என்று முடித்தாள். - மேலும் தொடர்ந்தாள். "அப்பாவுக்கு நான் வாழ்க்கையில் சுமையாக இருக்க விரும்பவில்லை. அவர் கைகளுக்கு நான் விலங்காக இருந்தேன். அவர் போலீசு இன்ஸ்பெக்டர். அவர் எத்தனையோ பேருக்குக் கைகளில் விலங்கு மாட்டி இருக்கிறார். நான் அவர் கைகளுக்கு விலங்காக இருந்தேன். இது பெண் விலங்கு: பெண்ணைப் பெற்றதால் ஏற்பட்ட பிணைப்பு. அதனால் அவர் தன் இளைய மகளுக்கு எதையும் செய்ய முடியாமல் களைத்து நின்றார். வந்தவர்கள் என் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் பொழுதுதான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். நான் இந்த வீட்டை விட்டு வெளியே சென்றால்தான் அவருக்கு விடுதலை கிடைக்கும் என்பதை உணர்ந்தேன். அப்பாவுக்கு நான் வாழ்க்கையில் சுமையாக இருக்க விரும்பவில்லை. தங்கை அவருக்குச் சுமைதான். அவளுக்கு எந்தப் பிரச்சனையும் தராமல் இருப்பதற்காகவே இறைவன் நிறைய அழகு கொடுக்காமல் படைத்துவிட்டான். அது அவளுக்கு நல்லதுதான். அப்பாவிடம் சல்லிக்காசு கிடையாது. அவர் வாங்கும் பென்ஷனைத் தவிர. அவர் யோக்கியமாக வாழ்ந்ததற்கு அவரைத் தண்டிக்க விரும்பவில்லை அவர் வாழ்ந்த வாழ்க்கை புனிதமானது. அந்தக் களங்கமற்ற வாழ்வு இந்த நாட்டுக்குத் தேவைதான் நான் அவருக்குக் கைம்மாறு செய்வது என்றால் இதுதான். என் கணவனை அவளிடம் ஒப்புவிப்பதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/183&oldid=772902" இலிருந்து மீள்விக்கப்பட்டது