பக்கம்:நனவோட்டங்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ரா. சீனிவாசன் இந்த நாட்டில் மணமாகாத பெண் ஒரு குடும்பத்தில் முக்கியமான பிரச்சனை. அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமானால் இதைத்தான் செய்ய முடியும். இதை மனத்தில் வைத்துக்கொண்டுதான் தங்களிடம் நெருங்கிப் பழகினேன், உங்களை அவளுக்குக் கட்டித் தருவது என்று முயன்றேன். நீங்கள் அதற்கு இசையவில்லை. உங்கள் நாட்டம் என்னைச் சுற்றியே கிடந்தது. உங்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருந்தது. ‘காதலுக்குக் கண் இல்லை என்ற தவறான படத்தைப் பார்த்துக் கொண் டிருந்தீர்கள். அது தவறு. அவர்கள்' படத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அந்தப் பாத்திரங்களுள் ஒருவராக நான் அமைந்து விட்டேன் என்பதை அந்தப் படம் பார்க்கும் பொழுதே உணர்ந்தேன். என் நாடகத்துக்கு மற்றொரு நடிகரும் தேவைப்பட்டது. அது நீங்களாக இருக்கலாம் என்று தோன்றியது. உங்களையும் பார்க்கச் சொன்னேன். படம் வந்தால் அப்படித்தான் வரவேண்டும். காதலுக்குக் கண் இல்லை. அதை ஒரு படமாக நான் கருதவில்லை. அந்த ரசனையிலிருந்து உங்களை மாற்ற விரும்பினேன். ஆனால் பாலச்சந்தர் கொண்டு போன முடிவு சரியாகப் படவில்லை. வாழ்க்கையில் பிரச்சனை களை எழுப்புகிறாரே தவிர விடை அவரால் காணமுடிய வில்லை. ரசிகர்களின் செண்டிமெண்டு அவரைத் தடை செய்கிறது. நான் செண்டிமெண்டுக்கு அஞ்சி இப்படியே அழிந்து போக விரும்பவில்லை. யாராவது புதுவழி காட்டினால் தான் இந்தச் சமுதாயம் திருந்தும். என்கதை' தனிப்பட்ட ஒரு பெண்ணின் கதை அல்ல. மற்றவர்கள் இந்த உண்மையைக் காண முடியாது; அவர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. நான் பழகும் குடும்பங்கள் பலவற்றில் இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டுதான் வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/184&oldid=772903" இலிருந்து மீள்விக்கப்பட்டது