பக்கம்:நனவோட்டங்கள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 8 183 'வாழாவெட்டி' என்ற இனத்தை இந்த ஆணினம் படைத்துக் கொண்டு தான் இருக்கிறது. மாமனார் கார் வாங்கித்தர வில்லை என்று ஒரு பெண்ணை அடித்துத் துரத்தி இருக்கிறான். சொத்து தன் பேரில் மாற்றித் தரும்படி அடித்து விரட்டி இருக்கிறான் மற்றொருவன். பேசிய வரதட்சணைப் பணம் தரவில்லை, என்பதற்காகச் சாந்தி முகூர்த்தத்தை மறுத்து விட்டிருக்கிறான் மற்றொருவன். சீர்வரிசை கொண்டுவரவில்லை என்று துரத்தி விட்டிருக் கிறான். பெண்களின் வாழ்க்கை வழுக்கு நிலமாகத்தான் இருக்கிறது. நிலைத்து நிற்பது அரிய முயற்சியாகத்தான் இருக்கிறது. யாரும் இதை எடுத்துச் சொல்வது இல்லை. என் வாழ்க்கைப் பிரச்சனையை யாரிடம் எடுத்துக் கூற முடியும். பெண்ணைக் கொடுமைப் படுத்தினால் அவள் மற்றொருவனை மணப்பது தவறு அல்ல. அது தான் சரி என்ற எண்ணம் இந்த நாட்டில் உருவாக வேண்டும். அப்படி உருவானால் ஆண்கள் இந்தத் தவறைச் செய்யமாட்டார்கள். அவன் நிச்சயமாக என் தங்கையைச் சரியாக வைத்து வாழ்வான். என் வாழ்க்கையில் அவன் விளக்கம் கண்டான். வாழா வெட்டி என்ற சொல்லுக்குக் கருத்து அப்பொழுதுதான் விளங்கியது. வாழ்வதில் பயன் இல்லை என்ற உணர்வு தோன்ற வாழும் வாழ்க்கையைத்தான் இந்தச் சொல்லால் சொல்கிறார்கள் என்பதை உணர் கின்றேன். "ஏன் வேலையை விட்டு விட்டாய் நீ" என்று கேட்டேன். "என் கணவர் வசதிமிக்க வாழ்க்கை உடையவர். நான் மேலும் தொடர்ந்து வேலை செய்வது சமூகத்துக்குச் செய்யும் துரோகம். பெண்கள் வேலை செய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/185&oldid=772904" இலிருந்து மீள்விக்கப்பட்டது