பக்கம்:நனவோட்டங்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ரா. சீனிவாசன் வசதி உடையவர்கள் செய்யக்கூடாது. அந்த வாய்ப்பை மற்றவர்களுக்குத் தரவேண்டும். அதற்காகத் தான் வேலையை விட்டுவிட்டேன்." என்றாள். என் கற்பனை எங்கோ பறந்தது. எனக்கு ஒரு மனைவி வாய்த்துவிட்டாள். வேளைக்குச் சோறு; அன்புக்கு இனிய சொல், உறவுக்கு ஒருத்தி இந்தப் புதிய கண்ணோட்டத் தோடு என் வாழ்க்கையைப் பார்த்தேன். "சே! பிரமசாரியாக வாழ்ந்தது எவ்வளவு தவறு!" என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. மனை மாட்சி உடையவள் அவசியம் தான். அதில் ஒரு குறையும் உஷாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மங்கலமாகத் தான் என் குடும்ப வாழ்வு தொடரும் என்று எண்ணத் தொடங்கினேன். அம்மாவுக்கு எப்படி விளக்குவது? உஷா தன் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்தாள். அவர்களுக்கு வெளிச்சம் தெரிகிறது. அம்மாவுக்கு எப்படி விளக்க முடியும். தடுமாறும் குருடர்களுக்கு விளக்கேற்றினால் மட்டும் என்ன பயன்? அந்த விளக்கு அவர்களுக்குப் பயன் படப் போவதில்லை. விளக்குக்குப் பயன் இல்லை. என்ன செய்வது என்பதே எனக்குத் தெரியவில்லை. என் கால்கள் சென்ற வழியே நடந்தேன். வழியில் பல காட்சிகள் என்னைக் கவர்ந்தன. குஷ்டரோகி முகமெல்லாம் தடிப்பு: கைகள் எல்லாம் குறைப்பு: வாழ்க்கையே வெறுப்பு அவனுக்கும் ஒரு பத்தினி இருந்து அவனை வண்டியில் வைத்து இழுத்துச் சென்றாள்! வயது எண்பது இருக்கும். ஒட்டிய உடல், மெலிந்த தோற்றம், நலிந்த வாழ்வு. அக்கிழவரின் கைகள் முன்னால் நடந்து சென்ற கிழவி ஒருத்தியின் தோள்களைப் பிடித்துச் சென்றன. அந்த அன்புக் காட்சியைப் பல நாள் பார்த்து இருக்கிறேன். அன்றும் அதைப் பார்த்தேன். இளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/186&oldid=772905" இலிருந்து மீள்விக்கப்பட்டது