பக்கம்:நனவோட்டங்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன. வோட்டங்கள் 185 துளிர்கள் இணைந்து சென்றது ஒன்றும் புதிதாகப் படவில்லை. நடந்து சென்ற குடும்பம். தோள் மேல் அவன் ஒரு குழந்தையை வைத்து நடந்தான்; அவன் பின்னால் அவன் மனைவி தொடர்ந்தாள். அவள் தன் இடுப்பில் ஒரு குழந்தையை வைத்திருந்தாள். இருவரும் நடந்து கொண்டே சென்றார்கள். எங்கே போகிறார்கள்? வாழ்க்கைப் பயணம் தனியாக அமைவது இல்லை. பாவம் அந்த ஒவியர் வாழ்க்கை தனிப் பயணம்தானே. இயற்கையாக எழுகின்ற அன்பும் கடமையும் அவரைக் கட்டுப் படுத்தவில்லை. வானத்து மழையால் குளம் நிறையவில்லை. கால்வாய் நிரம்பி வழிந்து ஒடி விழுந்த தண்ணிரால் குளம் நிறைந்தது. அவரிடம் செல்லலாம் என்பதுதான் என் நோக்கம் அவரிடம் சென்றால் என் சொந்தப் பிரச்சனையை எப்படி அவரிடம் கூறுவது? அவரிடம் அரசியல் பேசலாம், சமூக இயல் அறியலாம், காதல் பிரச்சனையை எப்படிப் பேச முடியும். அவர் என்ன ஜோசியரா என்னை ஏமாற்ற: எதிர்பாராத விதமாக அந்தப் புரட்சி அதுதான் பழக்காரி அந்த வழியே வந்து சந்தித்தாள். "உங்கள் வீட்டுக்குத் தான் வருகிறேன்," என்றாள். எனக்குத் துரக்கிவாரிப் போட்டது. "தீர்மானமாக முடிவு செய்து கொண்டேன்; தங்களோடு வாழ முடிவு செய்து விட்டேன்" என்றாள். எனக்கு இடியோசை கேட்பது போல் இருந்தது. “உங்களுக்கு அவகாசம் தந்தேன்; யோசனை பண்ணச் சொல்லி, பிறகு முடிவு கூறும்படி, உங்களால் முடியவில்லை, நான் யோசித்து முடிவு செய்து விட்டேன்." "என்ன பைத்தியம் பிடித்து விட்டதா உனக்கு ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/187&oldid=772906" இலிருந்து மீள்விக்கப்பட்டது