பக்கம்:நனவோட்டங்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ( ரா. சீனிவாசன் "இல்லை அந்த இரண்டு குழந்தைகளையும் அந்தப் பெரியவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் போனவுடன் தங்கள் கருத்தை எடுத்துச் சொன்னேன். அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அவரே முன்னிருந்து மணம் முடித்து வைப்பதாகச் சொன்னார்" என்று சொன்னாள். "மேலும் அவர் சொன்னார் விதவை மணம் செய்து கொள்வது தவறு இல்லை. இந்த இளம் வயதில் இப்படியே காலம் கடத்துவது நல்லதல்ல என்று அறிவுரை சொன்னார். நீங்கள் அங்கு வருவீர் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. அதனால்தான் நானே வந்து விட்டேன்." "உனக்கு எப்படி இவ்வளவு தைரியமாகப் பேச மனம் வருகிறது?" உண்மை சொல்வதற்கு ஏன் பயப்பட வேண்டும். நாணம் வெட்கம் அதெல்லாம் அது சின்ன வயசில். இப்பொழுது எதையும் துணிந்து பேசும் பழக்கம் வந்துவிட்டது. "உங்கள் வீட்டுக்குத்தான்." "எங்கள் அம்மா !” "அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் பிள்ளை தான் இந்த முடிவுக்கு வந்தார். அவர் அடிக்கடி குப்பத்துக்கு வருவார். எங்கள் வீட்டில் தங்குவார்' என்று நான் எடுத்துக் கூறுகிறேன்" என்று சொன்னாள். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிந்து விட்டதே என்று பயந்து விட்டேன். "நீ பயப்படாதேய்யா. நான் பேசுகிறேன். வா போகலாம்" என்றாள். "எங்கே?" என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவள் பிடிவாதமாக இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/188&oldid=772907" இலிருந்து மீள்விக்கப்பட்டது