பக்கம்:நனவோட்டங்கள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 8 187 அதற்கப்புற்ம் சொன்னாள்; "பயப்படாதே எனக்கு எல்லாம் தெரியும், உங்க ஆபீசிலே இதுதான் பேச்சாமே, உஷாவை நீங்கள் கலியாணம் செய்துகொள்ளப்போவதாக ஒவியரிடம் சொன்னேன். அவர் தான் அனுப்பி வைத்தார். உங்கள் அம்மாவிடம் நல்ல விதமாகப் பேசி அதுக்கு வேண்டியதைச் செய்யச் சொன்னார்." "அது எப்படி உன்னால் முடியும்" 'நீங்கள் கவலைப்படாமல் வாங்க நான் முடிக்கிறேன்" என்றாள். அதை மறுக்க முடியவில்லை. எனக்கு ஏதோ ஒரு அசாதாரண துணிவும் ஏற்பட்டது. அம்மாவுக்கு எடுத்துச் சொல்ல யாராவது அவசியம் தானே. அவள் தான் வந்து போகட்டுமே என்று அழைத்துச் சென்றேன். கண்ணம்மா வீட்டுக்குள்ளே சென்றாள். "ஓ! நீயா இங்கே எங்கே வந்தாய்?" “வேலைக்கு அல்ல; நான் இந்த வீட்டு எசமாணி." "என்னடி இது” "ஆமாம் உங்கப் பிள்ளையைக் கலியாணம் செய்து கொண்டேன். அவர்தான் புரட்சி என்று சொல்லி என்னிடம் வந்து பேசினார். இல்லை என்று சொல்ல முடியுமா கேட்டுப் பாருங்கள்.” st - rri b” "உங்கள் கையாலே என் நெற்றிக்குப் பொட்டு வைத்தால்தான் கலியாணத்திற்குச் சம்மதிப்பேன் என்று சொல்லி அவரை நேரே வீட்டுக்கு அழைத்து வந்தேன்.” 'விதவைக்குக் குங்குமமா? இதுவரை நான் கொடுத்ததே இல்லையே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/189&oldid=772908" இலிருந்து மீள்விக்கப்பட்டது