பக்கம்:நனவோட்டங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 17 அவன் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி என்று ஆபிஸில் என்னைப் பற்றிப் பேசுவார்கள். பிரம்மச்சாரி என்றால் தெரிகிறது. கட்டை' என்று சொல்வதில் அர்த்தமே தெரிவ தில்லை. உணர்ச்சியற்றவன் என்பது தானே அர்த்தம்; அப்பொழுதெல்லாம் நான் கதர் போட்டிருப்பேன். ஜிப்பா தான் தைத்துப் போட்டிருப்பேன். கதர், காந்தி, பிரம்மசரியம் இதெல்லாம் ஒன்றோடொன்று தொடர்பு பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். 'பிரம்மச்சரியம் காப்பது எப்படி இந்த மாதிரி பைத்தியக்கார விஷயங்களில் மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்த காலமும் உண்டு. நேரு தொப்பி போட்டிருப்பதைப் படத்தில் பார்த்திருக் கிறேன். அரசியலுக்கும் தொப்பிக்கும் நிறைய தொடர்பு இருந்ததென்று நினைக்கிறேன். நானும் ஏன் போடக் கூடாது. சே. வடநாட்டுக்காரனாகி விடுவேன். அது எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் கதர்க் குல்லாயும் துணிந்து போட்டுக் கொண்டு ஆபீசுக்குப் போனேன். எல்லாரும் என்னையே கவனித்தார்கள். சென்னைக்கு வரும் கவர்னர்கள் இப்படித்தான் வருகிறார்களென்று நினைக்கிறேன். உண்மையிலேயே பெரிய மனிதன் ஆக ஏதாவது இப்படிச் செய்வது அவசியம் என்று எனக்குப் பட்டது. ஆனால் அந்தத் தொப்பி போட்டுக் கொண்ட போது என்னால் சிரிக்க முடியவில்லை. மற்றவர்கள் தான் சிரித்தார்கள். இதை நினைத்துப் பார்க்கும்போது இப்போதும் எனக்குச் சிரிப்புத்தான் தோன்றுகிறது. இதுவே காந்தி காலத்தில் நான் இப்படிப் போயிருந் தால் யாராவது என்னைப் பார்த்துச் சிரிப்பார்களா? அப்போது அதற்குத் தனி அர்த்தம். சிறை செல்லத் தயார் என்று அர்த்தம்; தேசபக்தன் என்று அர்த்தம். தியாகபூமி' படம் பார்த்தேன். பழையபடம் அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை. அதிலே உமா ராணியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டானே அந்த ஹிரோ, அவன்தான் நினைவிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/19&oldid=772909" இலிருந்து மீள்விக்கப்பட்டது