பக்கம்:நனவோட்டங்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ல் ரா. சீனிவாசன் "அவள் இனிமேல் விதவையாக இருக்கமாட்டாள். சுமங்கலியாகத்தான் இந்த வீட்டில் இருக்கப் போகிறாள். அதற்கு உங்கள் வாழ்த்தைக் கோருகிறாள்." "அவன் குழந்தை குட்டியுமா இருக்க வேண்டியவன் அவனை !” "அதுக்குக் கவலைப்படாதீங்க" இவ்வாறு சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுது அந்தக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒவியர் வந்து சேர்ந்தார். "இவர்கள் என் குழந்தைகள், பேரனும் பேர்த்தியுமாக இருப்பார்கள்." அம்மாவுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. "என்ன ஓவியரே இதெல்லாம் உங்களுக்கு நல்லாஇருக்கா! அவன்தான் தெரியாமல் நடந்து கொண்டால் நீங்க புத்தி சொல்லி இருக்கக் கூடாதா. அவ்வளவு தூரம் பழகவிட்டது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா?” "என்னம்மா செய்யறது; வயசு பிள்ளை. அது அது தன் இஷ்டமாகத்தான் நடந்து கொள்ளும்." "அதுக்கு ஒரு முண்டச்சிதான் கிடைத்தாளா?" என்று கடுமையாகச் சொன்னாள். "அவளும் ஒரு பெண்தானே!" "ஆமாம் பெண்; இரண்டு குழந்தைக்குத் தாயாகி விட்டவளுக்கு இந்தக் கேடுகெட்ட புத்தி ஏன் ஏற்படனும்?" "அதனால் அவளைப் பெண் இல்லை என்று சொல்ல முடியுமா. இப்பொழுது அவள் ஒரு விதவை; நீ பொட்டு இட்டால் அவள் சுமங்கலி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/190&oldid=772910" இலிருந்து மீள்விக்கப்பட்டது