பக்கம்:நனவோட்டங்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 9 189 "அப்பகடிட அவள் எப்படி என் மருமகளாக முடியும்?” "ஏன் முடியாது. சொன்ன வேலையைத் தட்டாமல் செய்வாள்; இதுதானே மருமகளுக்கு வேண்டிய லட்சணம்." 'முடியவே முடியாது. அவளுக்குக் குழந்தைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒழிந்து போவுது என்று ஏற்றுக்கொள்வேன். இந்த மாதிரி வரும் என்று எதிர்பார்க்கவில்லை?” "குழந்தைகள் தானே பாரம். நான் வேண்டுமானால் குழந்தைகளை வளர்த்துக் கொள்கிறேன்." "முடியவே முடியாது; வேண்டுமானால் அவன் செய்த தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வாங்கிக் கொண்டு போய்விடுங்கள்.” "அவரைச் சொல்லச் சொல்லுங்க; நாங்க போறோம்." "என்னடா வேடிக்கை பார்க்கிறே" "இல்லை. சந்தர்ப்பம் வரும்போதுதானே பேச வேண்டும்.” "அவர்கள் அத்தனை பேரும் வெளியே போக வேண்டியதுதான்" "அப்படின்னா!" "நானும் அவர்களோடு போறேன். நீ மட்டும் இந்த வீட்டிலே" "இருப்பேன் என்று எதிர்பார்க்கிறாயா!' "ஒரு சாண் கயிறு." - "நான் செய்த தவறுக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/191&oldid=772911" இலிருந்து மீள்விக்கப்பட்டது