பக்கம்:நனவோட்டங்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ரா. சீனிவாசன் "ஆமாம் அப்புறம் எப்படியாவது கெட்டு ஒழிந்து போ இல்ே "ஆக நீங்கள் செத்த பிறகு எந்தத் தவறும் செய்யலாம் ல." "கடவுளே! எனக்கு ஒன்றும் புரியவில்லை." "புரியும். நீங்க நினைக்கிறதுதான் சரின்னு எப்படிச் சொல்ல முடியும்." "இதை யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்." "இப்ப காலம் மாறிப் போச்சு அம்மா. மேல் நாட்டிலே விதவையை மணப்பது சகஜம். கணவனோடு வாழ முடியாமல் விவாகரத்து செய்து கொள்பவர் மறுமணம் செய்து கொள்கிறார்கள்." "அதெல்லாம் சினிமாக்காரிதான் செய்து கொள்வாள். அவளுக்கு அந்த அவசியம் ஏற்படுகிறது. அதனால் செய்து கொள்கிறாள்." - "இல்லேம்மா, அவளால் வாழமுடியாமல் தான். கணவன் அவள் தொழில் செய்ய உரிம்ை கொடுக்காததால் 孵 தான. "அது சரி. அவளுக்கு அது அவசியம். தன் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறாள்." "ஆமாம்மா. பொதுவாகச் சம்பிரதாயப்படி கலியாணம் செய்து கொள்கிறார்கள். அவள் பிற ஆடவரோடு சேர்ந்து நடிக்க வேண்டி ஏற்படுகிறது. இதை அவள் கணவன் தாங்கிக் கொள்ள முடிவது இல்லை. அந்தப் பண்பாடு இல்லாமல் போய் விடுகிறது. அதனால்தான் விவாகரத்து ஏற்படுகிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/192&oldid=772912" இலிருந்து மீள்விக்கப்பட்டது