பக்கம்:நனவோட்டங்கள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 191 "அது சரிதான் அப்படித்தான் யாரையாவது பிடித்து வந்தாலும் பரவாயில்லை. நீ ஒரு பழக்காரி, வேலைக்காரி, குழந்தைக்காரி, அவளைப் போய்ப் பிடித்து வந்துவிட்டு." "அப்படியும் ஏற்படலாம் என்று காட்டுவதற்குத் தான் அவர்களை அழைத்து வந்தேன்." "அப்படின்னா” "அந்த ஓவியர் மனிதருள் மாணிக்கம். அவர் மீதி விஷயத்தைச் சொல்வார்” என்று முடித்தேன். "தம்பி ஆபீசில் வேலை செய்கிறாள். அழகாக இருப்பாள். இன்ஸ்பெக்டர் மகள். அவளைக் காதலித்தது உங்கள் மகன்." "கலியாணம் செய்து கொள்ளப் போகிறானா" அதை முதலிலேயே சொல்லக் கூடாதா." "அதைத்தான் சொல்ல வந்தேன். அவள் விவாகரத்து செய்து கொண்டவள். அவன் சரியாக வைத்துக்கொண்டு வாழவில்லை. அவர்களுக்கு வேறு எந்த பந்தமும் இல்லை." "அப்படியானால்” "அவள் உன் மகனுக்காகவே அவனை விவாகரத்து செய்து விட்டாள். அவளை ஏற்றுக்கொண்டுதான் தீர வேண்டும்." "என்ன இது" "அவள் இல்லை என்றால் உன் மகன் இந்தக் குடும்பத்தையே ஏற்று இருப்பான். உங்கள் வீட்டில் அவள் வேலைக்காரியாக வந்தபோது இவளைக் கண்டு இருக்கிறான். தொடர்ந்து அவள் பின்னால் சுற்றி இருக்கிறான். அவளை மணக்கவும் உறுதி செய்து கொண்டான். அந்த முடிவில் இருந்து மாற்றியவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/193&oldid=772913" இலிருந்து மீள்விக்கப்பட்டது