பக்கம்:நனவோட்டங்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ரா. சீனிவாசன் வருகிறான். பூரீதர் பி.ஏ. முதலில் சூட்டும் கோட்டும் போட்டிருந்தான். பின்னால் மனம் மாறிவிடுகிறான். அவனும் தியாக பூமியிலே அடியெடுத்து வைக்கிறான். 'காந்திக்கு ஜே என்று கத்துகிறான். லாரியிலே ஏற்றிக் கொண்டு போகிறார்கள். அவன் ஜிப்பாதான் போட்டுக் கொண்டு இருந்தான். அதுக்கப்புறம் அந்த ஜிப்பா எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதைப் போன்ற வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை. ஏற்பட்டாலும் எனக்கு ஒரு 'உமா கிடைக்க வேண்டுமே! அதுக்கு நான் ஓர் அக்கிரகாரத்தைத்தான் தேடிப் போக வேண்டும். அக்கிரகாரமெல்லாம் எப்பவோ மாறிவிட்டது. ஆனால் அதைத் தெரிவிக்கும் பெயர்ப்பலகை மட்டும் அத்தெருக்களில் ஒட்டிக்கொண்டு தன் பழைய வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அங்கே அதிகாரிகள் தாம் இப்போது குடி இருக்கிறார்கள். ஏன் அதிகாரிகள் தெரு என்று பெயர் வைத்தால் பொருத்தமாத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சமுதாயத்தின் வளர்ச்சி, உயர்வு எல்லாம் அங்கேதான் இப்பொழுது குடிகொண்டு இருக்கிறது. பட்டிக்காட்டுப் பெண் உமா அங்கே எங்கே கிடைக்கப் போகிறாள். 'பட்டிக்காட்டுப் பெண் ஏதாவது கட்டிக் கொண்டால் நல்லது என்று எப்பொழுதாவது நினைப்பேன். நினைக்கிறதும் உண்டு. ஏன் கட்டிக் கொள்ளக்கூடாது. காடு மேடுகளில் சுற்றித் திரிந்த அந்த மேனி கடுவெய்யிலைக் கண்டிருக்கும். கனத்த மழையைப் பார்த்திருக்கும். படிப்பு வாசனையே இருக்கக் கூடாதென்று நினைப்பதுண்டு. அவள் இதழ்கள் சிவந்திருக்கும். கன்னம் கனத்து இருக்கும். தலை மயிர் சுருண்டு அடங்காமல் இருக்கும். மென்மை அவளிடம் இருக்காது; ஆனால் நல்ல தன்மை குடிகொண்டிருக்கும். பரந்த உலகம். அவளுக்குத் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/20&oldid=772916" இலிருந்து மீள்விக்கப்பட்டது