பக்கம்:நனவோட்டங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 6 19 அது ஒரு தனி அழகுதான்; பெண்ணுக்கு நிறைய தெரியக்கூடாது; ஆனால் தெரியாமலே போகக் கூடாது. மெல்ல மெல்ல எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும். அம்மா அதுக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. பட்டிக் காடு பட்டணத்திற்கு வந்தால் அவள் இரண்டும் கெட்ட நிலையை அடைந்து விடுகிறாள் என்று அம்மா யாரையோ மனத்தில் வைத்துக்கொண்டு சொல்வாள். நானும் நினைப் பேனே தவிர தைரியமாக முடிவெடுக்கவில்லை. அதுவும் நல்லதுதான். எனக்கு இப்பொழுது அழகு எல்லாம் அவ்வளவாகப் பிடிப்பதே இல்லை. 'அன்பு என்பது எங்கே இருக்கிறது என்று தேடிக் காண முயல்வது உண்டு. விஷயத்துக்கு வராமல் எங்கெங்கோ சுற்றிக்கொண்டு இருக்கிறேன். அது இப்போ எல்லாம் பழகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. இதைப் போலப் பல நாட்களைக் கழித்துவிட்டேன். எதையும் பளிச்சென்று பேசவும் முடிவதில்லை. அந்தப் பழக்கம் எனக்கு இயல்பாகி விட்டது. அம்மாவுக்கு எனக்குக் கல்யாணமாகி அவள் ஒரு பாட்டியாக ஆகவேண்டும். நான் நினைத்தது உண்டு. பெண்கள் பாட்டியாக விரும்புவதில்லை என்று. அவர்கள் வயதையே சரியாகச் சொல்ல மாட்டார்கள் என்ற நகைச் சுவைத் துணுக்குகளைப் படித்து இருக்கிறேன். அவர்கள் என்றும் இளமையாகவே இருக்க மேக்கப்' செய்து கொள்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. அம்மாவைப் பார்த்த பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். அவர்களும் பாட்டியாக விரும்புவதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அழகாக 'மேக்கப்' செய்து கொள்கிற பெண்களைப் பார்க்க விரும்புவதைவிட இயற்கை வனப்புதான் என்னைக் கவர்வதுண்டு. அந்த இயற்கைவனப்பு ஏழ்மையின் வடிவில் உருவெடுத்து வருமென்று நான் எதிர்பார்த்ததே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/21&oldid=772917" இலிருந்து மீள்விக்கப்பட்டது