பக்கம்:நனவோட்டங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ரா. சீனிவாசன் அவள் அன்று என் வீட்டின் முன்னால் நின்றாள். கட்டான உடல், திட்டமிட்ட அழகு, வனப்பைக் காட்டும் முகம், மாசுபடிந்த மயிர்முடி. அது அவள் வறுமையின் சின்னம். கந்தல் புடவை; அது அவள் உடம்பை வெளிப்படுத்திக் காட்ட உதவியது. கழுத்தில் இல்லாத தாலி அவள் விதவை என்பதை எடுத்துக்காட்டியது. அந்த இடம் வாழ்ந்து கெட்ட நினைவை எழுப்பியது. நான் முதலில் அவளை விதவையென்று நினைக்கவே இல்லை, யாரும் அப்படி நம்ப மாட்டார்கள். பொதுவாக விதவைகள் முகத்தில் பொலிவை இழக்கிறார்கள். ஏன் அது தெரியவில்லை. மகிழ்ச்சி இல்லாததால் தான். திடீரென்று எனக்கு ஒர் எண்ணம் உண்டாயிற்று. அந்த மகிழ்ச்சியை நான் ஏன் கொடுக்கக்கூடாது. ஏதோ முன்னால் உளறிக் கொண்டிருந்தேனே அந்தப் புரட்சி உள்ளம் என்று நினைக்கிறேன் இந்தப் புதிய எண்ணத்தை உண்டாக்கியது. அவள் அழகாக இருந்தாள் என்பதை விட, கவர்ச்சி யாக இருந்தாள் என்று தான் கூற முடியும். சிலரைப் பார்க்கும் போது இதைப் போன்ற எண்ணம் உண்டாகிறது. அதில் அவளும் ஒருத்தியாகப்பட்டாள் என்று தான் சொல்ல முடியும். பின்னால் தான் தெரிந்தது அவள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்று. அவளை வெறும் விதவை என்றுதான் நினைத்தேன். ஆரம்பத்தில் இந்த முயற்சி என்னைக் கவரவில்லை. நான் நினைத்தேன் அவள் ஒரு விதவை அதோடு வறுமை; நிச்சயமாக அவள் ஒரு குடிசை வீட்டில்தான் இருப்பாள், எப்படியோ ஒன்றிரண்டு குழந்தைகள் இருக்கலாம். அதற்குமேல் இருக்க வாய்ப்பில்லை. அப்படி யிருந்தால் நிச்சயமாக எனக்கு அவள் மீது கவர்ச்சி உண்டாகி இருக்காது, அதை வைத்துக் கொண்டுதான் இப்படிச் சொல்கிறேன். இரண்டு குழந்தைகள் இருக்கக் கூடிய வயதாகப்படவில்லை. அவளுக்குக் குழந்தைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/22&oldid=772918" இலிருந்து மீள்விக்கப்பட்டது