பக்கம்:நனவோட்டங்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் : 21 இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். அவளுக்கு உற்ற கணவனாக நான் ஏன் இருக்கக்கூடாது. அந்த வறுமை என்னால்தான் நீங்கட்டுமே. இந்தப் பெருமை எனக்குத்தான் கிடைக்கட்டுமே. அவளுக்குக் குழந்தை இருந்தால் இருக்கட்டுமே. 'ஒடி விளையாடு பாப்பா-நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா' என்று சொல்லிக் கொடுப்பது அவ்வளவு கஷ்டமா என்ன. எனக்கு எப்படி ஒரு பெண்ணிடம் பழகுவது என்பதே தெரியாது. வயது ஆகிவிட்டது அம்மா அப்படிப் பல முறையும் சொல்கிறாள். இந்தச் சின்னவிஷயம் கூடத் தெரியவில்லை, அவளை எப்படி அணுகுவது. அவள் ஏதோ காசுகேட்க வந்திருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது. அவள் என்ன எதிர்பார்க்கிறாள். பத்துக்காசு இதைத்தான் பலர் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பிச்சைக் காரப் புத்திதான் பலரிடம் பார்த்திருக்கிறேன். ஏன் அவளிடம் பத்துரூபாய் தரக்கூடாது. அம்மா வீட்டில் உள்புறத்தில் இருந்தாள். துணிந்து பத்துரூபாய் நீட்டினேன். அவள் வாங்கிக்கொண்டாள். ஆபிஸில் சிலர் இப்படி நீட்டுவது வழக்கமெனக் கேட்டிருக் கிறேன். எனக்கு நிரம்ப சந்தோஷம். வெற்றி என்று நினைத்தேன். நீ எங்கே இருப்பது என்று துணிந்து கேட்டேன். அவள் என்னை ஒருமுறை முறைத்துப் பார்த்தாள். உண்மையில் நடுங்கி விட்டேன். இது என் முதல் அனுபவமென்று நினைக்கிறேன். அந்தப் பத்து ரூபாயைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டாள். பத்து எப்படி நூறாகிறது என்பதை அப்போது தெரிந்து கொண்டேன். தெருவிலே கோலம் போட்டிருப்பதைப் போல அது அலங்கோலமாகச் சிதறிக்கிடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/23&oldid=772919" இலிருந்து மீள்விக்கப்பட்டது