பக்கம்:நனவோட்டங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ரா. சீனிவாசன் "நல்ல நோட்டுத்தான்” என்றேன். "நான் அதைக்கேட்டுப் பெறவில்லையே” என்றாள். "பிச்சை' "அப்படித் தவறாக நினைத்துவிட்டீர்கள். உங்கள் வீட்டில் ஒருவேலை கிடைக்குமா என்று கேட்கத்தான் வந்தேன்" என்றாள். அவள் எங்கள் வீட்டில் நுழைய வந்த வேலைக்காரி என்பதை உணர்ந்தேன். அதற்குமேல் அம்மா வந்தாள். "யார்” என்றாள். 'பணத்தை மதிக்காத ஏழை என்று சொல்ல வாயெடுத்தேன், சொல்ல்த் தைரியம் வரவில்லை நான் வெளிப்பட்டு விடுவேன் என்பதால். "வேலை வேண்டும்” என்றாள் அவள். அம்மா அவளைக் கண்டு கொஞ்சம் அச்சம் கொண்டாள் எனத் தெரிந்தது. என்னை வைத்துக் கொண்டு அவளை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. "கொஞ்சம் வயசானவர்களைத்தான் கேட்டு அனுப்பினேன்" என்றாள். அம்மா சொல்லித்தான் வந்தாள் என்பதைத் தெரிந்து கொண்டேன். - "எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன" என்றாள். அப்பொழுதுதான் அவள் குழந்தைக்காரி என்று தெரிந்துகொண்டேன், நான் நினைத்தது தவறு. அவள் பிச்சைக்காரியல்ல, குழந்தைக்காரி. அவள் வேலைக் காரியாக வந்திருக்கிறாள். அவள் ஏன் வீட்டுக்காரியாக ஆகக் கூடாது. "அவள் வந்த காரியம் வெற்றி பெறவில்லை". அவள் திரும்பிவிட்டாள். போகிற வரையும் அவளைப் பார்த்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/24&oldid=772920" இலிருந்து மீள்விக்கப்பட்டது