பக்கம்:நனவோட்டங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 23 கொண்டிருந்தேன். அம்மா அவள் போகவேண்டும் என்பதற்காகவே விறு விறு' என்று உள்ள போய் விட்டாள். அவள் என் கற்பனையை எப்படியோ புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். அவள் தன் அடி மனத்தில் ஒரு தாய்; மேல் நோக்கில் ஒரு பெண்; அவள் பெண்மை எனக்குத் தெரிந்தது. அவள் தாய்மை எனக்குப் புலப்படவில்லை. வேலைக்காரியாக வந்த அவளைப் பிச்சைக்காரியாக மாறி நினைத்தேன். அவள் இளமையானவள். அதனால் தான் அம்மா ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் பிச்சைக்காரி ஆகக் கூடாது. நிச்சயம் ஆகக் கூடாது. அவளைத் தேடினேன், அவளை பஸ் நிலையத்தில் தேடினேன். அவளைப் பற்றிப் பயங்கரமான நினைவுகள் உண்டாயின. வறுமை அந்தச் சித்திரத்தை நிச்சயமாக அழித்துவிடும். அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை களுக்கு ஏதோ தின் பண்டம் வாங்கித் தருவதைப் பார்த்தேன். பக்கத்தில் ஒவியர் ஒருவர் படம் வரைந்து கொண்டிருந்தார். அவர் ஆதரவில்தான் அவள் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன், அவளிடம் துணிந்து பேச எனக்குத் தைரியம் கிடையாது. அவளிடம் என்ன பேசுவது, எனக்கே என்ன பேசுவது என்று தெரிய வில்லை. அம்மா அவளை வேலைக்காரியாகவே ஏற்க வில்லை. அவள் எப்படி மருமகள் என்ற இடத்தைப் பிடிக்க முடியும். அந்த ஒவியர் சாக்குத்துண்டில் அழகிய ஒவியங்களை வரைந்து கொண்டு இருந்தார். சிலர் நடுச்சந்தியில் பாட்டுப் பாடுவதைக் கேட்டிருக் கிறேன். அதைச் சுற்றித் திரளாக நின்று கொண்டிருப் பார்கள். அதை ரசிப்பார்கள். அவருக்குக் காசு போடுவார்கள். சங்கீதம் நடுத்தெருவுக்கு வருவதைப் போல இந்த ஓவியரும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டாரோ என்று எண்ணத் தொடங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/25&oldid=772921" இலிருந்து மீள்விக்கப்பட்டது