பக்கம்:நனவோட்டங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ரா. சீனிவாசன் "நீங்கள் சின்ன வயசில்" "டிராயிங் மாஸ்டர்" என்றார். அதுதான் நடுத் தெருவுக்கு வந்துவிட்டார். அதிக மாகப் பழகவில்லை என்று தெரிந்துகொண்டேன். "நான் இரண்டு தலைமுறைகளைப் பார்த்திருக் கிறேன்” என்றார். அதாவது இரண்டு ஆட்சிகளைப் பார்த்து இருக்கிறார் என்பது அதன் அர்த்தம் என்பதை அறிந்து கொண்டேன். இது கெளரவமான பிச்சை தான் என்று எண்ணத் தொடங்கினேன். அந்த எண்னத்திற்கே இடமில்லாமல் போய்விட்டது. அவர் யாரையும் காசு கேட்கவில்லை வெறும் படத்தை மட்டும் போட்டார். நான் அவசரப்பட்டு விட்டேன். பத்து ரூபாய்ப் பழக்கம் என்னை விட்டு நீங்கவில்லை. ஒரு புதிய பத்து ரூபாய் நோட்டை அவரிடம் தந்தேன். "நீங்கள் கோயம்புத்துாரா' என்று அவர் கேட்டார். இது இப்பொழுது பேச்சு வழக்கில் புகுந்த உருவகம் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனக்கு முதலில் விளங்கவில்லை. பிறகு விளங்கியது. நான் சரியான முறையில் சம்பாதிக்காத பணம் என்பது அவர் குறிப்பு. "உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா" பொதுவாக மணமாகிவிட்டால் பணத்தைக் கட்டிப் பிடிப்பார்கள் என்பது அவரது கருத்து என்று நினைக்கிறேன். "இல்லை"-இந்தச் சொல் அவள் காதிலும் பட்டது. அவள் அதை வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. "நான் பணம் வாங்குவதில்லை” என்றார். "பின் ஏன் நீங்கள் படம் வரைகின்றீர்கள்" "இது எனக்குப் பொழுது போக்கு"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/26&oldid=772922" இலிருந்து மீள்விக்கப்பட்டது