பக்கம்:நனவோட்டங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 o' ரா. சீனிவாசன் ஒவியர் உதவினார். அவருடைய குடிசையில் அந்தத் தாய்க்கு இடம் கிடைத்தது. அந்தத் தாய் எங்கெங்கோ வேலை தேடினாள். எங்கும் கிடைக்கவில்லை. அவள் அந்த ஒவியர் வீட்டில் இருக்கிறாள்" என்று சொன்னார். ஏன் அவர் அந்தக் கதையை என்னிடம் சொல்ல வேண்டும். அம்மா அவளுக்கு வேலை கொடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டவே என்று நினைக்கிறேன். நான் பேச்சை மாற்ற விரும்பினேன். அவர் தொடர்ந்து பேசினார். "நான் ஒவியத்தில் வெற்றி பெற்றவன் என்று கூற முடியாது. கலைக்குக் கற்பனை அவசியம். எனக்கு அது இல்லை. பெரிய வித்வான்களைப் பார்த்திருக்கிறாயா? அவர்கள் கதா காலட்சேபப் பிரசங்கங்கள் செய்வார்கள். பிரமாதமாகப் பேசுவார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள், மற்றவர்கள் எழுதி வைத்ததை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கின்றார்கள். அந்த நிலை தான் என்னுடையது' என்று கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையை ஒப்புக் கொண்டாரே என்பதற்காக, அப்போதுதான் டிராயிங் மாஸ்டர் வேறு, ஒவியர் வேறு என்பதைத் தெரிந்து கொண்டேன். "பின் ஏன் இந்தப் படங்களை எழுதுகிறீர்கள்?" "அவர்கள் ஏன் கதாகாலட்சேபங்கள் செய்கிறார்கள்" என்று கேட்டார். "மக்களுக்கு தெய்வ பக்தி உண்டாகும். தெய்வபக்தி இருந்தால் நல்லதை எண்ணுவார்கள்" என்று எனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னேன். "அந்த பக்தியைத் தான் என் படங்கள் உண்டு பண்ணுகின்றன. யாரும் என் ஓவியத்தை உற்றுகூடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/28&oldid=772924" இலிருந்து மீள்விக்கப்பட்டது