பக்கம்:நனவோட்டங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 27 பார்ப்பதில்லை. சுவாமி படம் என்று பக்தி செலுத்துவார்கள் அவ்வளவுதான்" என்றார். "அதை இங்கே ஏன் போட்டுக் கொண்டிருக் கிறீர்கள்.” “இதுவரை யோசிக்கவில்லை. இனிமேல்தான் யோசித்துச் சொல்லவேண்டும்” என்றார். "சிலருக்குச் சின்ன வயசு முதல் ஒரு தொழில் பழகி விட்டால் அதை விடமுடிவதில்லை. அதை யாராவது பார்க்கவேண்டும் என்று ஆசை” என்றார். அர்த்தமில்லாத கதைகள் பலர் எழுதுவதேன் என்பது அப்போது விளங்கியது. ஏதாவது எழுத வேண்டும், அவ்வளவுதான். அங்கே பக்கத்தில் பத்திரிகை விற்பவன் பத்திரி கையை விரித்து வைத்திருந்தான். 'ஊழல் விசாரணைகள்" என்று கொட்டையாகப் போட்டு இருந்தது. இது எனக்குக் கேட்டுக் கேட்டு மறுத்து விட்டது. அதை அவர் எனக்குக் காட்டினார். "மனிதன் கடவுளை மறந்து விட்டான். அதை நினைவு படுத்துவதற்குத்தான்" என்றார். "அதுக்கு இந்த இடம்தான் கிடைத்ததா?” "ஆபீஸர்கள் இங்கேதான் பஸ் ஏறுகிறார்கள். இதைக் கவனித்து நினைத்துப் பார்ப்பதற்கு இங்கேதான் அவர் களுக்கு ஓய்வு கிடைக்கிறது” என்றார். எனக்குப் பல விஷயங்கள் விளங்கிவிட்டன. "உங்களுக்கு இப்போ வருவாய்?" "பென்ஷன் வாங்குகிறேன்" "போதுமா”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/29&oldid=772925" இலிருந்து மீள்விக்கப்பட்டது