பக்கம்:நனவோட்டங்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ரா. சீனிவாசன் "அப்படி நினைத்துத்தான் அரசாங்கம் இந்த பென்ஷனைக் கொடுக்கிறது. இதுவரை போதும். இந்தப் பெண் வந்த பிறகு போதாது. இவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்." "அவள் உன் சொந்தக் காரியா?" "நீ தமிழ் படித்திருக்கிறாயா?" தமிழென்றால் பழைய இலக்கியம் என்பது அவர் கருத்து. "இல்லை" என்றேன். "யாதும் ஊரே யாவரும் கேளிர் கேட்டிருக்கிறாயா?" "பார்த்திருக்கிறேன்." "எல்லோரும் நம் உறவினர்" என்றார். தமிழ் அந்த ஒவியரிடம் வாழ்வதைப் பார்க்க முடிந்தது. "அவள் பிச்சை எடுக்கக் கூடாது, இந்த நாட்டில் யாரும் பிச்சை மட்டும் எடுக்கக்கூடாது" என்றார். "இவர்களை எப்படிக் காப்பாற்றப் போகிறீர்கள்?" "அது இந்தச் சமுதாயத்தின் பொறுப்பு" என்றார். ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன். - "ஆண்டவன்தான் சமுதாயம்; சமுதாயம் தான் ஆண்டவன்" என்று ஒரு புதிய கருத்தைச் சொன்னார். 3 நான் எதிர்பார்க்கவில்லை அவள் அதுதான்; அந்தப் பத்து ரூபாய் அந்தப் படத்தில் வந்து உட்காருவாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/30&oldid=772927" இலிருந்து மீள்விக்கப்பட்டது