பக்கம்:நனவோட்டங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 29 என்று. அவளும் 2-90 வாங்கியிருந்தாள். நான் தெரியாமல் அந்தப் படத்திற்கு வந்து உட்கார்ந்து விட்டேன். 'காதலுக்குக் கண் இல்லை' என்ற போஸ்டர் ஒட்டி யிருந்தது. உஷா சொன்னபடம் இடம் கிடைக்கவில்லை. மறந்துவிட்டேன். உஷா யாரென்று அறிமுகப்படுத்தா மலேயே அவள் பெயரைக் கூறிவிட்டேன். கதைகள் படித்திருக்கிறேனே தவிர நான் எழுதியது இல்லை. அதனால் தான் இந்தத் தவறைச் செய்துவிட்டேன். அவள்தான் என் அளிஸ்டெண்ட்டு. அப்படித்தான் ஆபீஸில் சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது எனக்கு அடுத்து வேலை செய்யும் உதவியாளர். இல்லாவிட்டால் அவளுக்கும் எனக்கும் எப்படித் தொடர்பு உண்டாகப் போகிறது. அவள்தான் சொன்னாள் அவர்கள் படம் பார்க்கச் சொல்லி. நான் இங்கே வந்து மாட்டிக்கொண்டேன். வேலைக்குத் திண்டாடிய ஒரு பெண் எப்படி 2-90க்கு வந்தாள். அவளைப் பற்றிய தவறான எண்ணம்தான் உண்டாயிற்று. அவள் என் பக்கத்திலேயே வந்து உட்கார்ந்து விட்டாள்; இருட்டில் தெரியவில்லை. பிறகு அவள்தான் என்று தெரிந்தது. அதே சாடை முதலில் கண்டுபிடிக்க முடியவில்லை. சில கதைகளில் வறுமையடைந்துவிட்டால் அவள் கொஞ்சம் அழகாக இருந்தால் அவளைச் சிவப்பு விளக்கில் நிறுத்தி அழகு பார்க்கிறார்கள். நிச்சயமாக இவள் சிவந்திருக்க மாட்டாள் என்று மட்டும் நம்பினேன். அப்படி அவள் நினைத்திருந்தால் என் பத்து ரூபாயை அவள் கிழிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒவியரின் ஆதரவில் இருக்கும் வரை அவள் பண்பு கெடாது என்று நான் நம்பிக்கை கொண்டேன். மெல்ல அவளுடல் என் மேனியில் தவறு அவள் மேனி என் உடம்பில் பட்டது. இப்படிச் சொன்னால் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/31&oldid=772928" இலிருந்து மீள்விக்கப்பட்டது