பக்கம்:நனவோட்டங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ( ரா. சீனிவாசன் எழுத்தாளன் என்று நினைக்கமுடியும். அதாவது அவள் ஸ்பரிசம் என் மீதுபட்டது. அது என்னமோ எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அவளுக்கும் எனக்கும் கொஞ்சம் தொடுதல் ஏற்பட்டது. ஆனால் தொடுப்பு ஏற்படவில்லை. சலனம் என்பதன் ஆரம்ப எழுத்தை அப்பொழுதுதான் கற்றுக்கொண்டேன். கொஞ்சநேரம் அவளும் என்னை விட்டு விலக நினைக்கவில்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற தலைப்பு மட்டும் என் நினைவிற்கு வந்தது. "நீங்கள் எப்பொழுதும் 2-90க்குத் தான் வருவதா?” என்று மரியாதையாகக் கேட்டேன். "என் கணவரோடு இதே இடத்தில்தான் வந்து உட்காருவேன். மாதம் ஒரு முறை இங்கே வருவோம். அவர் சம்பளத்திற்கு மறுநாள் அதே 2-ம் தேதி நாள் இது" என்றாள். "அப்படியானால் ஒவ்வொருமாதம் 2-ஆம் தேதி” "இதே இடத்திற்கு வருவேன்; இங்கேயே உட்காருவேன்; எந்தப் படமானாலும் அதைப் பார்த்துத் தான் போவேன்." என்று கணிரென்று சொனனாள். கல்லறையில் சில பெண்கள் ஆண்டுக்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை வந்து கண்ணிர் விடுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த அபூர்வ நிகழ்ச்சி எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. - "காதலுக்குக் கண் இல்லை-இந்தப் படம் பிடித்து இருக்கிறதா?" இடைவேளையில் இந்தக் கேள்வியைக் கேட்டேன். "தலைப்புத் தவறு" என்றாள். "கண்ணில்லாதவர்கள் தான் காதல் செய்வார்கள்" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/32&oldid=772929" இலிருந்து மீள்விக்கப்பட்டது